கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற 50 பெண்கள்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

இலவச வீட்டு மனை கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் 50 பெண்கள் தீக்குளிக்கமுயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரிசிப்பாளையம் அருகே உள்ள பாவேந்தர் நகரில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி, இலவசமாக வீட்டு மனைப் பட்டா வழங்குவதாக அதிகாரிகள்அறிவித்திருந்தனர். இதுதொடர்பான ஆய்வுகளும் முடிந்து வெகு நாட்களாகிவிட்டன.

ஆனால், வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் உரியபதில் தராமல் அவர்களை இழுத்தடித்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்குவிந்தனர்.

பின்னர் தங்களோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.இதையடுத்து போலீசார் ஓடி வந்து அவர்களைத் தடுத்தனர்.

இச் சம்பவத்தையடுத்து ஆட்சித் தலைவர் அலுவலக அதிகாரிகள் ஓடி வந்தனர். அனைவருக்கும் விரைவில் வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக உறுதிமொழி அளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+