தமிழக, ஆந்திர அதிகாரிகள் திருப்பதியில் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னைக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆந்திர அதிகாரிகள் வரும் 11ம் தேதி தமிழக அதிகாரிகளுடன்திருப்பதியில் ஆலோசனை நடத்துகின்றனர்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரிடம் ஸ்ரீசைலத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர்திறந்துவிட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உறுதி கூறினார். இதனையடுத்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஸ்ரீசைலத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. தற்போது ஸ்ரீசைலம்அணையில் இருந்து 2,975 கன அடி நீர் மட்டுமே திறந்துவிடப்படுவதால் இந்த தண்ணீர் கண்டலேறுக்கு வந்து சேரஒரு மாத காலம் ஆகும்.

இந் நிலையில் இரு மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்டம் வருகிற 11ம் தேதி திருப்பதியில்நடக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர், பொதுப் பணித்துறை செயலாளர்,தலைமைப்பொறியாளர், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் கண்டலேறு- பூண்டி நீர்த்தேக்கத்துக்கு இடையே நீர்கசிவு, தண்ணீர் திருட்டை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+