தமிழகத்திற்கு ரூ. 3,900 கோடி நிதி கோரும் கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 3,900 கோடி சிறப்பு நிதி ஒதுக்குமாறுமத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக வட சென்னை மக்களவை உறுப்பினர் செ.குப்புசாமி தலைமையில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியைச்சேர்ந்த தமிழக எம்.பிக்கள் அமைச்சர்கள் குழு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கருணாநிதியின்கடிதத்தைக் கொடுத்தது.
அந்தக் கடிதத்தில் பிகாருக்கு ஒதுக்கியது போல தமிழகத்திற்கும் ரூ. 3,900 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசுஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய சில திட்டங்கள் குறித்து பட்டியலிட்டுள்ள கருணாநிதி, பலகோரிக்கைகளையும் முன் வைத்துள்ளார். அதன் விவரம்:
1. மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனால் அடிக்கல் நாட்டப்பட்ட, நான்குநேரி உயர் தொழில்நுட்பபூங்காவை அமைக்கும் பணியினை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
2. ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் புகைப்பட சுருள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடுகளை அதிகரித்து அதற்குபுத்துயிர் ஊட்ட வேண்டும்.
3. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கார் தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டும்.
4. கோவையில் நலிவடைந்த நிலையில் உள்ள ஜவுளி ஆலைகளை சீரமைத்து அவற்றிற்கு புத்துயிர் ஊட்டவேண்டும்.
5. அரசு ஊழியர்கள் மற்றும் பிற துறை பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை அடிப்படை உரிமையாக்கும்சட்டத் திருத்தத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.
6. சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும். 7. இதேபோலமும்பைக்கும்-தூத்துக்குடிக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும்.
7. நான்கு வழிச் சாலைப் பணிகளில் 10 லட்சம் சாலைப் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைவுபடுத்தவேண்டும்.
8. சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்துடன் மேம்படுத்த வேண்டும்.
9. மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக தலைவர் கருணாநிதி வைத்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பழைய திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள், குடிநீர்வினியோகம், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ. 3,900 கோடி சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும்என்றும் கருணாநிதி கோரியுள்ளார்.
மன்மோகனுடனான இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனும் உடனிருந்தார்.












Click it and Unblock the Notifications