சிபிஐ வலையில் முன்னாள் தமிழக சிபிசிஐடி டிஜிபி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

DGP Ramaniநாட்டையே உலுக்கிய ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் தமிழக முன்னாள் சிபிசிஐடிடிஜிபி ரமணியிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு அவரிடம் இரண்டு முறை விசாரணைநடத்தப்பட்டதாக டெல்லி சிபிஐ வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இப்போது ரமணி தமிழக போலீஸ் பயிற்சிக்கல்லூரியின் தலைவராக உள்ளார்.

முத்திரைத் தாள் மோசடி வழக்கில் ஏற்கனவே தமிழக சிபிசிஐடி டிஐஜி முகமது அலி, இன்ஸ்பெக்டர் சங்கர், எல்.ஐ.சி.அதிகாரி சாதுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மோசடி மன்னன் அப்துல்கரீம் தெல்கியின்தமிழகக் கூட்டாளி நிஜாமுதீன், அவருக்கு உடந்தையாக இருந்த சிவகாசி அச்சகத் தொழிலாளி ஆகியோரும்சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரமணி சிபிசிஐடி டிஜிபியாக இருந்தபோது, முகம்மது அலியுடன் சேர்ந்து கொண்டு போலி முத்திரைத் தாள்மோசடிக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதாக சிபிஐ குற்றம் சாட்டுகிறது.

அப்துல் கரீம் தெல்கியும் நிஜாமுதீனும் தொலைபேசியில் பேசும்போது அதை ஒட்டுகேட்டது சிபிஐ. அப்போதுடிஜிபி ரமணியின் பெயரை இருவரும் குறிப்பிட்டு பேசுவது சிபிஐக்குத் தெரியவந்தது.

இதனால் ரமணியிடம் சிபிஐ எந்த நேரத்திலும் விசாரணை நடத்தலாம் என்று பல மாதங்களாகவே கூறப்பட்டுவந்தது. ஆனால், மிக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அவர் தனது செல்வாக்கை வைத்து தப்பி வந்தார்.

இந் நிலையில் சிபிஐயின் இயக்குனர் பதவியைப் பிடிக்கவும் தனக்கு வேண்டிய டெல்லி நபர்கள் மூலம் காய்நகர்த்தி வந்தார் ரமணி.

இந்தச் சூழலில் தான் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. தெல்கியின் மோசடி தெரிந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதோடு, நிஜாமூதீன் மூலமாக தெல்கியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்குரமணி உதவியதாகவும் சிபிஐ கருதுகிறது.

மேலும் பெங்களூரில் ஜெயிலில் இருந்து கொண்டே போலீஸ் உதவியுடன் செல்போன் மூலம் ரமணியுடன்பேசியுள்ளான் அப்துல் கரீம் தெல்கி என்கிறது சிபிஐ.

இது குறித்து சென்னையில் உள்ள ரமணியின் வீட்டைத் தொடர்பு கொண்டு, உங்களிடம் சிபிஐ விசாரணைநடத்தியதா என நிருபர் கேட்டபோது, உங்களுக்கு அது சம்பந்தமாக நான் ஏன் விளக்கம் தர வேண்டும் என்றுசூடாக பதில் கேள்வி கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டார்.

இதற்கிடையே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ள முகம்மது அலி இப்போது நிபந்தனைப்படிபெங்களூரில் தங்கியிருந்து தினமும் அங்குள்ள சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகிறார். விரைவில்அவரை சிபிஐ மீண்டும் தனது கட்டுப்பாட்டில் எடுத்து மீண்டும் விசாரிக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+