For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவரஞ்சனியின் பெயர் மாறாட்டம் அம்பலம்!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

Sivaranjaniமதுரை போலீஸ்காரர் மணிகண்டன் கல்யாண ஆசை காட்டி தன்னைக் கற்பழித்து விட்டதாகக் கூறி போராட்டம்நடத்திய சிவரஞ்சனி தற்போது அரசு பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந் நிலையில்சிவரஞ்சனியின் தந்தை காமராஜ், தாய் புனிதா, அக்காள் பொன்மணி ஆகியோர் மேலூர் காவல் நிலையத்திற்குவந்தனர்.

சிவரஞ்சனியின் உண்மையான பெயர் சத்யா என்றும், அவர் கடந்த மாதம் 7ம் தேதியே வீட்டை விட்டுவந்துவிட்டார் என்றும் இத்தனை நாள் எங்கு இருந்தார் என்பது தெரியாது என்றும் அவரது பெற்றோர்கூறினார்கள். சிவரஞ்சனி என்பது காமராஜின் அண்ணன் மகளின் பெயர் என்றும் அவர்கள் கூறினர்.

அத்துடன் சிவரஞ்சனி தனது தந்தை மலேசியாவில் இருப்பதாக கூறியிருப்பது பொய் என்பதும், அவர் கார்டிரைவராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து காமராஜ் மற்றும் புனிதா கூறியதாவது:-

சத்யா தனது பெயரை சிவரஞ்சனி என்று கூறி இருக்கிறாள். அவளின் நடத்தையால் எங்களுக்கு பெரும்அவமானம் ஏற்பட்டு உள்ளது. அவளை நாங்கள் உடன் அழைத்து செல்ல மாட்டோம். நாங்கள் வசதியாக வாழ்ந்துஇப்போது ஏழ்மையில் இருக்கிறோம். இருப்பினும் குடும்ப மானம்தான் எங்களுக்கு பெரிது என்றார்கள்.

சிவரஞ்சனியின் பெற்றோரை பத்திரிக்கை நிருபர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, எங்களைப்படமெடுத்தால், தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறினார்கள்.

இதற்கிடையே சத்யா தனது பெயரை சிவரஞ்சனி என்று மாற்றி, தான் வசதியான குடும்பப் பெண் என்று கூறிமணிகண்டனுடன் பழகியதாகவும் என்றும், அதன் பின்பு சத்யா வசதி இல்லாதவர் என்று தெரிந்தவுடன் அவரைமணிகண்டன் கைவிட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

இந் நிலையில் சத்யாவுக்கு இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது. அதனையடுத்து அவர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

மணிகண்டன் கைது:

தலைமறைவாக இருந்த போலீஸ்காரர் மணிகண்டன் இன்று கைது செய்யப்பட்டார்.

சிவரஞ்சனியின் குற்றச்சாட்டை அடுத்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இந்தப் புகார் காரணமாகமணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளில் மேலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந் நிலையில் மணிகண்டன் இன்று அதிகாலை மேலூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டநீதிபதி, மருத்துவப் பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டார். இதனையடுத்து மணிகண்டன் மதுரை அரசுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மணிகண்டன் குடும்பத்தாரும் தலைமறைவு:

மணிகண்டன் சொந்த ஊர் அலங்காநல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளையம்பட்டி ஆகும். மணிகண்டன் சிறந்தஜல்லிக்கட்டு மற்றும் கபடி வீரர் ஆவார். இவரது தந்தை சுப்ரமணி முன்னாள் ராணுவ வீரர். தயார் பெயர் காந்தா.

மணிகண்டனுக்கு ஜெகன்நாத் என்ற அண்ணனும், 2 அக்காள்களும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே திருமணம்ஆகிவிட்டது. சிவரஞ்சனி விவகாரம் வெளியே வர ஆரம்பித்ததும், மணிகண்டனின் குடும்பத்தினர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். விசாரணைக்காக போலீஸார் இவர்களையும் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X