அந்தமான் கப்பல் கொலை: கைதானவர் விடுதலை
சென்னை:
அந்தமானில் இருந்து சென்னை வந்த கப்பலில் நடந்த இஸ்ரேலியர் ஒருவரின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சமையல்காரரை விரைவு நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அந்தமானில் இருந்து எம்.வி.நன்கெளரி என்ற பயணிகள் கப்பல்சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.
இந்தக் கப்பலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கோகன் கோயல் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலிகேத்தரினா எலிசபெத்துடன் (வயது 19) பயணம் செய்தார். கப்பலின் மேல்தளத்தில் எலிசபெத்துடன் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் கோகன் கோயல் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்த ராஜேஷ்பால் என்பவரை சென்னை போலீஸார்கைது செய்தனர்.
ராஜேஷ்பால் மீது சென்னை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிபாரதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் ராஜேஷ் பாலை விடுதலை செய்து தீர்ப்புஅளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ரசாயனப் பரிசோதனை, தடய அறிவியல் துறை மற்றும் கைரேகைப் பதிவுநிபுணர் அறிக்கை ஆகியவை சாட்சியத்தினை வலுப்படுத்தும் வகையில் அமையவில்லை. இந்த வழக்கில் புகார்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவரை பல சந்தேகங்கள்உருவாகியுள்ளன.
எனவே, ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியத்தினைக் கொண்டு ராஜேஷ்பாலுக்கு தண்டனை வழங்க முடியாது. எனவே,வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை
அந்தமான் கப்பல் கொலை: சமையல்காரர் கைது
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications