அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Andhamaan - Chennai ship

கொலை நடந்த அந்தமான்- சென்னை கப்பல்
அந்தமானில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கப்பலில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியர்நடுக் கடலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

செக்ஸ் தகராறு காரணமாக நடந்ததாகக் கருதப்படும் இந்தக்கொலை தொடர்பாக கப்பல் ஊழியர்கள் 2 பேர் உள்பட 16 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் 8 பேர்பெண்கள்.

முதலில் கப்பலில் இருந்து சென்னை போலீசாருடன் பேசிய கப்பல் அதிகாரிகள் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது என்றுமட்டும் தெரிவித்தனர். கொலை என்று தெரிவிக்கவில்லை.

எம்.வி.நன்கெளரி என்ற பயணிகள் கப்பல் டிசம்பர் 4ம் தேதி போர்ட் பிளேரில் இருந்து சென்னை கிளம்பியது.இதில் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த கோகன் கோயல் (27) என்ற சுற்றுலாப் பயணி இங்கிலாந்தைச் சேர்ந்த தனதுகாதலி கேத்தரினா எலிசபெத்துடன் (வயது 19) பயணம் செய்தார்.

கப்பலின் மேல் தளத்தில் எலிசபெத்தும் கோகனும் செக்சில் ஈடுபட்டுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோகனை நடுஇரவில் மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். கோகனின் அலறலையடுத்து விழித்துக்கொண்ட எலிசபெத் மேல் தளத்தில ஒருவர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.

இதையடுத்து கேப்டனுக்கு தகவல் தரப்பட்டது. இதன்பின் கேப்டன் கோர்த்வால் சென்னை போலீசை தொடர்புகொண்டார். கப்பல் துறைமுகத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.

சென்னை இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் 2 படகுகளில்கப்பலுக்கு விரைந்தனர்.

கொலையாளியை அடையாளம் காட்டமுடியும் என்று எலிசபெத் கூறியதையடுத்து அடையாள அணிவகுப்புநடத்தப்பட்டது. இதன் முடிவில் எலிசபெத் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் 2 கப்பல் ஊழியர்கள், 6ஆண்கள், 8 பெண்களை போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

கப்பல் ஊழியர்கள சிலரும், சில ஆண்களும் கப்பலில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்கமுயன்றதாகவும் எலிசபெத் தெரிவித்துள்ளார். இவரும் கோகனும் கப்பலில் கண்டபடி கட்டிப்பிடித்து, செக்சில்ஈடுபட்டதாகவும் இதனால் அவர்களுக்கும் சில பயணிகளுக்கும், கப்பல் ஊழியர்களுக்கும் இடையே நடுக்கடலில்தகராறு நடந்ததாகவும் தெரிகிறது.

கோகனும் எலிசபெத்தும் கோவாவில் ஒருவரை ஒருவர் சந்தித்து நட்பாகி அங்கிருந்து அந்தமான் சென்றதும்தெரியவந்துள்ளது. மேலும் கப்பலின் மேல் தளத்தில் இக் கொலை நடந்துள்ளது. அங்கு செல்ல கப்பல்ஊழியர்களின் சிறப்பு அனுமதி வேண்டும்.

மேல்தளத்தில் கோகனும் எலிசெபத்தும் செக்சில் ஈடுபட்டதை பார்த்ததால் எலிசபெத்தை அடைய முடியாத யாரோதான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

கோகனின் உடலில் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த உடலைப் பெற்றுச்செல்லுமாறு டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்னை போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+