குழந்தையின் வாயில் அமிலம் ஊற்றிய அப்பா !
சென்னை:
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன், பிறந்து 65 நாட்களே ஆன பெண் குழந்தையின் வாயில்அமிலத்தை ஊற்றி அதைக் கொலை செய்ய முயன்றான்.
இந்த கொடூர மனிதனின் பெயர் முத்துவேல். பெயிண்டராக வேலை பார்க்கும் இவனுக்கும் நளினி என்பவருக்கும்10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமானதும் கர்ப்பமானார் நளனி. இதனால் சந்தேகமடைந்தான்முத்துவேல்.
கல்யாணமான 10 மாதங்களுக்குள் எப்படி கர்ப்பமானாய், கல்யாணத்திற்கு முன்பே உனக்கு வேறு நபருடன்தொடர்பு இருந்துள்ளது என்று கூறி நளினியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளான். இந் நிலையில் 65நாட்களுக்கு முன் நளினிக்கு குறைப் பிரசவம் ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது.
குறைப் பிரவசமாக குழந்தை பிறந்ததால், நளினி வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே தங்கியிருந்துகுழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டியதானது. இதனால் முத்துவேலுக்கு கோபம் இரட்டிப்பாகியது.
"எவனுக்கோ" பிறந்த குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்குப் போகாமல் இருக்கிறாயே என்று கூறிநளினியை அடித்து துன்புறுத்தியுள்ளான். இந் நிலையில், கடந்த திங்கள்கிழமை நளினி இல்லாத நேரத்தில்குடிபோதையில் வீட்டுக்கு வந்தான் முத்துவேல்.
வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த அமிலத்தை எடுத்து குழந்தையின் வாயில் ஊற்றியுள்ளான்.பின்னர் இரும்புக் கம்பியை குழந்தையின் ஆசன வாய் வழியாக நுழைத்து சித்திரவதை செய்துள்ளார்.
முத்துவேலின் இந்த மிருகச் செயலால் கதறித் துடித்த அக் குழந்தை, சில நிமிடங்களில் மயங்கி விழுந்தது.
குழந்தையின் வாய் எரிந்து போய், வயிறு வீங்கத் தொடங்கியது. இதைப் பார்த்த முத்துவேல் குழந்தை இறந்துவிட்டதாக கருதி அங்கிருந்து ஓடிவிட்டான்.
அப்போது எதேச்சையாக வீட்டுக்கு வந்த பக்கத்துக்கு வீட்டுப் பெண் குழந்தையின் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் அலறியுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையைப் உடனடியாகஎழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர்.
என்ன நடந்தது என்றே தெரியாமல் டாக்டர்கள் குழம்பிப் போய் உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர்.அப்போது மருத்துவமனைக்கு வந்த முத்துவேல் அத்தனை பேர் முன்னிலையில் மனைவியை தாறுமாறாகத்திட்டினான்.
அவரைத் தடுத்த டாக்டர்கள், குழந்தையை என்ன செய்தாய் என்று விசாரித்தபோது, கொஞ்சமும் கலங்காமல்நடந்ததைக் கூறியுள்ளான் முத்துவேல்.
அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக குழந்தைக்குத் தேவையான சிகிச்சையை ஆரம்பித்தனர்.
குழந்தையின் உணவுக் குழாய், வயிறு போன்றவை மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.கடந்த ஒரு வாரமாக குழந்தை மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.
முத்துவேல் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications