குளத்தை தூர் வாரிய வைகோ
திருநெல்வேலி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த குளத்தை பொதுமக்களுடன் இறங்கி தூர் வாரினார்.
ஓய்வெடுக்க கலிங்கப்பட்டி வந்த வைகோவிடம் கிராமத்தில் பல்லாண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ள குளத்தைதூர் வார நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வைகோ தானே களத்தில் இறங்கினார். அவரும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பியும் மற்றும் கிராமமக்களுடன் இணைந்து தூர் வாரினர்.
பின்னர் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
குளம் நீண்ட காலம் தூர் வாரப் படாமல் இருந்தது. இதனை அரசு செய்தாலும் முழுமையான பணிகள்நடப்பதில்லை. 10 லட்சத்திற்கு கான்ட்ராக்ட் விட்டால் அதில் 2 லட்சத்திற்குதான் பணிகள் நடக்கின்றன. மீதிப்பணத்தை கான்ட்ராக்டர்களும், அதிகாரிகளும் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே, நாங்களே இந்த பணியைசெய்ய முடிவெடுத்தோம்.
நெல்லை மாவட்டத்திற்கு மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணைக்கட்டு கரையில் 25 ஆண்டுகளுக்கு முன்புஉடைப்பு எடுத்தது. இதனை சரி செய்ய முந்தைய எம்ஜிஆர் ஆட்சியின் போது கேரள அரசுக்கு, நமது அரசு ரூ.10லட்சம் கொடுத்தது. ஆனால், இன்னமும் அந்த உடைப்பை கேரளம் சரி செய்யவில்லை.
அந்த அணைக்கட்டு குறித்தும் ஆழியாறு பரம்பிகுளம் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் கேரள முதல்வரைசந்திக்க உள்ளேன். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் எனது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்என்றார் வைகோ.
-
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications