அதிமுக-பாஜக கூட்டணி தெளிவாக உள்ளது !
சென்னை:
பா.ஜ.க.- அதிமுக கூட்டணி மிகத் தெளிவாக இருப்பதாக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் குமாரவேலுகூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் அரசு நக்ஸலைட்டுகள் மீதான தடையை நீக்கியுள்ளது பேராபத்தை விளைவிக்கப்போகிறது. கடந்த 100 நாட்களில் நக்ஸலைட்டுகள் பல மடங்கு பலம் பெற்றுவிட்டனர். நிறைவேற்ற முடியாதகோரிக்கைகளை எல்லாம் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் அவர்களுடன் அரசு பேச்சு நடத்துகிறது.
நக்ஸல்களின் இந்த வளர்ச்சி தமிழகத்தை நிச்சயமாக பாதிக்கும். அவர்களை தமிழகத்தில் முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும்.
புதிய வீராணம் திட்டத்தால் சென்னையில் குழாய் மூலம் குடிநீர் விடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால்கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் வராது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதை நம்புவோம்.
அதிமுக-பா.ஜ.க கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேசுவோம்(!).டெல்லியில் பா.ஜ.க. தலைவர்கள் பேசுவதைத் தான் ஜெயலலிதாவும் கூறுகிறார்.
பா.ஜ.கவை எதிர்த்தால் மட்டுமே திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் நீடிப்பார்கள். இதனால்தான் எங்களை தொடர்ந்து கருணாநிதி எதிர்த்து வருகிறார் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications