போனஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்
சென்னை:
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை கழகங்களின் ஊழியர்களுக்கு தீபாவளிபோனஸ், கருணைத் தொகை மற்றும் சரண் விடுப்புத் தொகை ஆகியவற்றின் விநியோகம் தொடங்கியது.
அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை உள்ளிட்ட அரசுகழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகைஆகியவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர மின்வாரிய ஊழியர்களுக்கு சரண் விடுப்பை ஊதியமாக பெறுவதில் இருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கிஅரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இடைக்கால நிவாரணத்தையும் அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து போனஸ், கருணைத் தொகை மற்றும் சரண் விடுப்புத் தொகையை விநியோகம் செய்யும் பணிதொடங்கியது. இந்த ஆண்டுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13மாதங்களுக்கான இடைக்கால நிவாரணத் தொகை ஆகியவையும் போனஸுடன் சேர்த்துத் தரப்பட்டது.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் போனஸ் மற்றும் இதர தொகைகளைப் பெற்றுச்சென்றனர். சென்னைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் போனஸாக ரூ. 3,000, ரூ. 3,250இடைக்கால நிவாரணம் மற்றும் சரண் விடுப்பாக ரூ. 3,000 ஆக மொத்தம் ரூ. 9,250 கிடைத்தது. இதுதவிர தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு விழாக்கால முன்பணமாக ரூ. 1,000ம் வழங்கப்பட்டது.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications