ராமதாஸ், ஏ.கே.மூர்த்திக்கு செம்மொழிப் போராளி பட்டயம்
சென்னை:
பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் தமிழறிஞர்கள் 150 பேருக்குதலைநகர் தமிழ்ச்சங்கம் செம்மொழிப் போராளிப் பட்டயம் வழங்கி கெளரவித்தது.
சென்னையில் நடைபெற்ற தலைநகர் தமிழ்ச்சங்க வெள்ளிவிழா, தமிழ் ஆட்சிமொழி மற்றும் திருக்குறள் தேசியநூல் வலியுறுத்தல் மாநாட்டில் இந்தப் பட்டயங்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றம் எதிரே செம்மொழி கோரிக்கையை வலியுறுத்திப் பட்டினிப் போராட்டம்நடத்திய 150 தமிழறிஞர்களுக்கும், அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தற்காக ராமதாசுக்கும்,கன்னியாகுமரி--டெல்லி ரயிலுக்கு திருக்குறள் தொடர்வண்டி எனப் பெயரிட்டதற்காக ஏ.கே. மூர்த்திக்கும் இப்பட்டயங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் ராமதாஸ் பேசியதாவது:
தமிழை அழிக்கும் நோக்கில் பகைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அம்முயற்சியை நீக்கி தமிழ்மொழியைக்காக்க வேண்டும்.
அதற்கு தமிழறிஞர்களின் துணையும், வழிகாட்டுதலும் வேண்டும். சினிமா, தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்திணிப்பால் தமிழ் மொழி வேகமாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குநர் மா.நன்னன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள்துணைவேந்தர் பொற்கோ, தலைநகர் தமிழ்ச்சங்கத் தலைவர் சேது, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications