இலங்கை: அடுத்த மாதம் மீண்டும் அமைதி பேச்சு?
கொழும்பு:
அடுத்த மாதம் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைமீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நின்று போன பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்க நார்வே கடும் முயற்சிகள் எடுத்துவருகிறது.
இந் நிலையில் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க புலிகள் கொடுத்த திட்டத்துக்கு பதில் திட்டம் தயாராகஇருப்பதாகவும், அதைப் பரிசீலிக்க விடுதலைப் புலிகள் தயாராக இருந்தால் அது தொடர்பான அறிக்கையைவழங்க இவங்கை அரசு தயாராக உள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா கடந்த வாரம்அறிவித்தார்.
ஆனால் சுயாட்சி அமைப்பு குறித்துப் பேச முன் வந்தால் மட்டுமே இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவோம் எனவிடுதலைப் புலிகள் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
இந் நிலையில் 18 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான வாய்ப்புகள்உருவாகி வருவதாக இலங்கையின் சண்டே அப்சர்வர் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அதிபர் சந்திரிகாவிற்கு மிகவும் நெருக்கமான ஒரு பிரதிநிதி, புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சிபகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு புலிகளின் பிரதிநிதிகளுடன் ரகசிய ஆலோசனைகளில்இறங்கியுள்ளதாகவும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி தான் இது என்றும் அந்தப்பத்திரிக்கை கூறியுள்ளது.
இதற்கிடையே இப் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்து வரும் நார்வே தூதுக் குழுவும் அடுத்த மாதம் இலங்கைவரவுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications