கருத்து கூற நக்கீரன் கோபால் மறுப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நக்கீரன் கோபால்மறுத்துவிட்டார்.
வீரப்பன் மரணம் குறித்து கோபாலின் கருத்தை அறிய நக்கீரன் அலுவலகத்தை நிருபர்கள் தொடர்பு கொண்டனர்.அப்போது இணை ஆசிரியர் காமராஜ், வீரப்பன் விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கோபால் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
காயமடைந்த அதிகாரிகள்:
இதற்கிடையே வீரப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த போலீசார் தர்மபுரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
டி.எஸ்.பி. ஹூசேனுக்கு (53) வயிற்றில் குண்டு பாய்ந்தது. உடனடியாக தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவருக்கு குண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து தங்க மறுத்துவிட்ட ஹூசேன்,உடனே பணிக்குத் திரும்பிவிட்டார்.
இதே போல தண்டபாணி, ராமசாமி ஆகியோரின் கை, கால்களில் குண்டுகள் உரசிச் சென்றதில் காயம்ஏற்பட்டுள்ளது.
கிரனைட் வீசிய அதிரடிப்படை:
முன்னதாக வீரப்பனை சரணடையுமாறு அதிரடிப்படை மைக் மூலம் கூறியதாகவும் அதை அவன் கேட்க மறுத்துதுப்பாக்கியால் சுட்டவுடன் வேன் மீது கிரனைட் குண்டுகளை வீசியுள்ளனர் படையினர். இதில் வேனில் முன் பக்கம்சேதமடைந்தோடு, உள்ளே இருந்த வீரப்பனும் அவனது ஆட்களும் நிலை குலைந்துள்ளனர்.
இதன் பின்னரே ஆட்டோமேடிக் துப்பாக்கிகளால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்போது இந்த எண்கெளன்டரில் முக்கிய சாட்சியாக விளங்கும் ஆம்புலன்ஸ் வேனை போலீசார் துணியால் மூடிபத்திரப்படுத்தியுள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications