பள்ளியிலிருந்து வெளியேற்றப்படும் இளைய மகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
| வீரப்பனின் இளைய மகள் பிரபாவை பள்ளியில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடலூர் அருகே கூத்தப்பாக்கத்தில் உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் பிரபா 7ம் வகுப்பு படித்துவருகிறார். இவரை சென்னையைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தான் சேர்த்துவிட்டார். இவர் வீரப்பனின் மகள் என்பதுபள்ளியின் முதல்வர் தவிர வேறு நிர்வாகிகள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. முதல்வர் இந்த விஷயத்தைரகசியமாகவே வைத்திருந்தார். பள்ளி வளாகத்திலேயே உள்ள விடுதியில் தங்கி பிரபா படித்து வந்தாள். |
ஆனால், இதற்கு அந்த வழக்கறிஞர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கல்வியாண்டு முடிவதற்குள், எந்தத் தவறும்செய்யாத ஒரு மாணவியின் டிசியை இடையில் தந்து அவளை வெளியேற்ற பள்ளி நிர்வாகத்துக்கு உரிமையில்லைஎன்று கூறியுள்ள அவர், நீதிமன்றத்தையும் நாடுவார் என்று தெரிகிறது.













Click it and Unblock the Notifications