வீரப்பன் மீது தர்மபுரி போலீஸ் வழக்கு பதிவு
தர்மபுரி:
வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்டம் டவுன்காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வீரப்பன் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் தர்மபுரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தர்மபுரி டவுன் காவல்நிலையத்தில், அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் புகார் செய்தார். அவரது புகாரின் அடிப்படையில்,டி.எஸ்.பி. கிருஷ்ணராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை விசாரணை நடத்தி தற்போது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில் வீரப்பன்,சேத்துக்குளி கோவிந்தன், சந்திரே கெளடா, சேதுமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொலை முயற்சி, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, உரிமம் இல்லாமல் ஆயுதம்வைத்திருந்தது, சட்டவிரோதமாக ஆயுதங்களைப் பயன்படுத்தியது, வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்ததுஆகிய பிரிவுகளின் கீழ் வீரப்பன் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், டி.எஸ்.பி.க்கள் கிருஷ்ணராஜ், மகேந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த பாடி கிராமப் பகுதியைப்பார்வையிட்டு ஆம்புலன்ஸை சோதனையிட்டனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து துப்பாக்கிக் குண்டுகளையும்சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications