வீரப்பன் பணத்தை தேடி காட்டில் புகுந்த மக்கள்

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் காட்டுக்குள் புதைத்து வைத்துள்ள பணம் மற்றும் இதர பொருட்களை தேடிக்கண்டுபிடித்து எடுப்பதற்காக சேலம், தர்மபுரி, ஈரோடு வனப் பகுதிகளைச் சேர்ந்த மலை வாழ் மக்கள் காட்டுக்குள்வேட்டைக்குக் கிளம்பியுள்ளனர்.

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டு விட்டான். இதனால் காட்டுக்குள் இருந்து வந்த அதிரடிப்படையினரின்கெடுபிடி முற்றிலும் குறைந்து விட்டது. காட்டுக்குள் மக்கள் செல்ல அதிரடிப்படை தடை விதிக்கவில்லை.

இதையடுத்து வீரப்பன் கும்பல் காட்டுக்குள் பல கோடி ரூபாயைப் புதைத்து வைத்திருக்கலாம் என்று எண்ணும்மலைவாழ் மக்கள் காட்டுக்குள் சென்று அவற்றைத் தேடிக் கண்டுபிடித்து எடுக்கக் கிளம்பியுள்ளனர்.

ஈரோடு, தர்மபுரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த வீரப்பன் உலவி வந்த வனப் பகுதிகளையொட்டி கிராமத்தினர்தற்போது காட்டுக்குள் புகுந்துள்ளனர். கூட்டம் கூட்டமாக செல்லும் அவர்கள் வீரப்பன் தனது புதையலை எங்குவைத்திருக்கிறான் என்பதை தேடத் தொடங்கியுள்ளனர்.

இந்த தேடுதலின்போது பணம் கிடைக்கிறதோ இல்லையோ, வீரப்பன் சுற்றித் திரிந்த காட்டுப் பகுதிகளைசுதந்திரமாக பார்க்க முடிகிறதே என்ற சந்தோஷத்துடன் சிலர் காட்டுக்குள் சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+