வீரப்பனை வெளியே இழுத்து வந்த இலங்கை திட்டம்

Subscribe to Oneindia Tamil

சத்தியமங்கலம்:

Vijaykumar with STF menகண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றிவந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம்வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல்போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்பவைக்கதாகவும் பிட்டை போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்டதிட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக்கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள்செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான்சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

Saravanan and Velladuraiஇதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராயஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள்ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம்மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழையகோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரைரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம்உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப்புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாகஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப்பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.-47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார்நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

Sentamaraikannanஇதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லிஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால்அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான்யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையைவெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில்கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்ததுஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்-அன்ட்-டெளன் 30 கி.மீ. தூரம்ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில்வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும்கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்தஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

Home secretery Sheelarani Sungath with STF கைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில்ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனைசூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனைகுறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும்வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படைடிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டைபோட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

அதிரடிப்படை விரித்த எலெக்ட்ரானிக் வலை
ஆபரேசன் குக்கூன்- முழு பின்னணி தகவல்கள்
வீரப்பனை கொன்ற ஆபரேஷன் குக்கூன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+