For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபரேசன் குக்கூன்- முழு பின்னணி தகவல்கள்

By Staff
Google Oneindia Tamil News

சத்யமங்கலம்:

- தட்ஸ்தமிழ் க்ரைம் பீட் டீம்

Vijayakumar and Saravanan

விஜயகுமாருடன் சரவணன் (வெள்ளை சட்டை அணிந்திருப்பவர்)
வீரப்பனைப் பிடிக்கும் ஆபரேசன் குக்கூன் ரகசிய திட்டத்தை நிறைவேற்ற அதிரடிப்படையின் உளவுப் பிரிவுவீரர்கள் உயிரையும் பணயம் வைத்து மிக ஆபத்தான ரிஸ்குகளை எடுத்துள்ளனர்.

இந்த ஆபரேசன் குறித்து அதிரடிப்படை தலைவர் விஜய்குமார் சொன்ன தகவல்களின் பின்னணி விவரங்கள் லப்டப்பை பல மடங்காக்குகின்றன.

கைதிகளாய் உள்ளே போன உளவாளிகள்:

வீரப்பனின் தொடர்புகள் விவரங்களை திரட்டுவதற்காக பல அதிரடிப்படை வீரர்கள் கைதிகளாக மாறிசிறைகளுக்குச் சென்றனர்.

வீரப்பனுக்கு உதவி செய்து அதிரடிப்படையினரிடம் மாட்டி மைசூர், கொள்ளேகால் சிறைகளில்அடைக்கப்பட்டவர்களிடம் நெருங்கி விவரம் திரட்டவும், மற்றும் வீரப்பனுக்கு நெருக்கமான தமிழ் தேசியஇயக்கத் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைகளுக்கும் இவர்கள் கைதிகளாக அனுப்பப்பட்டனர்.

Veerappanஇது பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. உயர் மட்டத்தில் முதல்வர், உள்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி,சிறைத்துறை டிஐஜி, அதிரடிப்படையின் தலைவர் விஜய்குமார், உளவுப் பிரிவு தலைவர், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன், கர்நாடக முதல்வர், கர்நாடக டிஜிபி, அம் மாநில சிறைத்துறை டிஜிபி, அதிரடிப்படைத் தலைவர்ஆகியோர் மட்டத்தில் மட்டுமே இந்த விவரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

சிறைகளுக்குச் சென்ற அதிரடிப்படை வீரர்கள் அதை தங்கள் வீடுகளுக்குக் கூட தெரிவிக்கவில்லை. காட்டில்தேடுதல் வேட்டையில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவே வீட்டினர் நினைத்திருந்தனர்.

பஸ் கண்டக்டர்களாய்..

உள்ளே அனுப்பப்பட்ட வீரர்கள், வீரப்பனுக்கு நெருக்கமானவர்கள் அடைபட்ட செல்களிலேயேஅடைக்கப்பட்டனர். அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி பல விவரங்களைத் திரட்டி விஜய்குமாருக்குஅனுப்பியது இந்த உளவுப் பிரிவு டீம்.

மேலும் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தும் உளவபார்க்கப்பட்டது. இந்தக் கடிதங்கள் அதிரடிப்படையால் ஸ்கேன் செய்யப்பட்டன. இதில் தபால்துறையின்உதவியும் பெறப்பட்டது. இதிலும் பல விவரங்கள் கிடைத்தன.

இதை வைத்து வீரப்பனுக்கு உதவும் முக்கிய நபர்களை அடையாளம் கண்டு கொண்டது அதிரடிப்படை.

இதையடுத்து அந்த நபர்களுடன் நெருங்கிப் பழக அடுத்த ரிங் உருவாக்கப்பட்டது. அவர்கள் வீரப்பன்நடமாடும் கிராமங்களில் மேஸ்திரிகளாக, தோட்ட வேலை பார்க்கும் ஆட்களாக, லாரி டிரைவர்களாக, லோடுமேன்களாக, மரம் வெட்டுபவர்களாக, ரோட்டோர கடைகளில் புரேட்டா- டீ மாஸ்டர்களாக மெல்ல மெல்லஉள்ளே நுழைந்தனர்.

இவர்களிடம் இருந்து தகவல்களைத் திரட்டிக் கொண்டு வரும் வேலையைச் செய்தது பஸ் கண்டக்டர்கள். இந்தபஸ் கண்டக்டர்களும் அதிரடிப்படையின் உளவுப் பிரிவினர் தான். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின்கண்டக்டர் லைசென்சுடன் காட்டுப் பகுதிகளில் இயங்கிய அரசு பஸ்களில் இவர்கள் கண்டக்டர்களாகநியமிக்கப்பட்டனர்.

Ambulance

அந்த ஆம்புலன்ஸ்
இவர்கள் உளவாளிகள் என்பது பஸ்ஸை ஓட்டிய டிரைவர்களுக்கே தெரியாது என்பது தான் விசேஷம்.

வீரப்பனின் கும்பலில் கலந்து...

மிகவும் திட்டமிட்டு, பொறுமையாக, மிக ரகசியமாக சுமார் ஓராண்டுக்கும் மேலாக நடந்த ஆபரேஷன் இது.

இந்த நெட்வோர்க் மிகக் கச்சிதமாக வேலை செய்தது. வீரப்பனுக்கு உணவு, மருந்து சப்ளை செய்யும்ஆட்களுக்குள்ளும் ஊடுவினர் இந்த நெட்வோர்கின் ஓரிரு உளவாளிகள். குறிப்பாக அதிரடிப்படை வீரர்முருகேசன். இவர் வீரப்பன் கும்பலில் கிட்டத்தட்ட ஊடுருவியே விட்டார்.

உதவிய கனகராஜ்:

வீரப்பன் கும்பலில் முருகேன் ஐக்கியமாக உதவியது வீரப்பனுக்கு மிக நெருக்கமான கனகராஜ் என்ற நபராம்.இவர் மீது தான் இப்போது வீரப்பன் ஆதரவாளர்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.

Sethumalaiகனகராஜின் உதவியுடன் வீரப்பனை ஆம்புலன்சில் ஏறி வெளியுலகுக்கு வரும் அளவுக்கு அவனை வளைத்தவர்முருகேசன்தான். வீரப்பனின் கண் பார்வை குறைவை காரணமாக வைத்து சிகிச்சை பெறலாம் என்று சொல்லிஅவனை காட்டுக்கு வெளியே கொண்டு வந்துள்ளார்.

இந்த வாரத்தில் திங்கள், புதன் அல்லது வெள்ளிக்கிழமையில் தர்மபுரி அருகே உள்ள மருத்துவனைக்குச் செல்வதுஎன்று வீரப்பன் திட்டமிட, அடுத்தடுத்த ரிங் உளவாளிகள் மூலமாக விஜய்குமாருக்கு தகவல் வந்து சேர்ந்தது.

ஆம்புலன்ஸான வேன்...

ஒரு ஆம்புலன்சில் சென்றால் யாருக்கும் சந்தேகம் வராது என வீரப்பனை நினைக்க அந்தத் தகவலும்விஜய்குமாருக்கு வந்து சேர்ந்தது. உடனே தங்களது டெம்போ டிராவலர் வேனை ஆம்புலன்ஸ் ஆக்கியதுஅதிரடிப்படை.

ஸ்டிக்கர்களை வாங்கி வந்து எஸ்.கே.எஸ். மருத்துவமனை, சேலம் என ஒட்டியதோடு ஆம்புலன்சின் செட்-அப்பைஅந்த வேனுக்குள் உருவாக்கினர். ஆம்புலன்ஸ் கண்ணாடிகளை மறைத்து திரை இருக்க வேண்டும் என வீரப்பன்சொல்ல, முகாமில் ஆம்புலன்ஸ் கண்ணாடிகளுக்கு திரை தைக்கப்பட்டு, மாட்டப்பட்டது.

Vijayakumar

விஜயகுமாரை தோளில் தூக்கி மகிழும் அதிரடிப்படையினர்
சரவணனின் தைரியம்:

இதையடுத்து தான் கிளைமாக்ஸ். எப்போது கிளம்புவான் வீரப்பன் என்பது தான். திங்கள், புதன், வெள்ளி என்றுமூன்று நாட்களில் அவன் எப்போது வருவான் என்பது தெரியாத சூழல்.

இந் நிலையில் திங்கள்கிழமை இரவே அவன் ஆம்புலன்ஸ் கேட்க, உடனே கிளம்பியது அதிரப்படையின்ஆம்புலன்ஸ் வேன். அதை ஓட்டிச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன், டேக்டிகல் டிரெயினிங் முடித்த ஒருகமாண்டோ வீரர். ஆயுதத்துடன் வரும் எதிரிகளை ஆயுதமின்றி நிலை குலைய வைக்கும் பயிற்சி பெற்றவர்.

இவரைத் தேர்வு செய்தது விஜய்குமாரே தான். தீவிர மன தைரியமும் தெளிவான திட்டமிடலும் கொண்டசரவணனுக்கு வெள்ளை யூனிபார்ம் மாட்டப்பட ஆம்புலன்சில் கிளம்பினார்.

லாரிகளில் கிளம்பிய அதிரடிப்படை:

கிளம்பிப் போன பிறகு அதிரடிப்படையை அவர் மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல். வீரப்பனையும்அவன் ஆட்களையும் அழைத்துக் கொண்டு வரும்போது அவர் எந்த சந்தேகமும் வராதபடி நடந்து கொள்ளவேண்டிய கட்டாயம்.

அவர் கிளம்பிய மறு நொடியே அதிரடிப்படையின் டாப் 50 கமாண்டோக்கள் 3 பிரிவாகப் பிரிந்து லாரிகளில்கிளம்பினர். போலீஸ் வண்டிகள் என்றால் சந்தேகம் வரலாம் என்பதால் லாரிகள்.

Sethukuli Govindhanயாருக்கும் யூனிபார்ம் இல்லை. லுங்கி, சாதாரண சட்டைகள், டிரவுசர், பனியன்களுடன் லாரிகளில் ஏறிய இந்த டீம்வேன் வரும் பாடி வனப் பகுதியில் 3 பிரிவாகப் பிரிந்து டிபென்ஸ் பொசிஷன் எடுத்து காத்திருந்தது.

சந்தேகம் வாரதபடி சாலையோரத்தில் லாரிகளை நிறுத்தி அதில் மணல் மூட்டைகளை அடுக்கி, அவற்றின் பின்னால்துப்பாக்கிகளுடன் தயாராக பதுங்கியிருந்தனர் அதிரடிப்படையினர்.

சிக்னல் கிடைத்தது...

வீரப்பனையும் ஆட்களையும் ஏற்றிக் கொண்டு திட்டமிட்டபடி வந்தார் சரவணண். பாடி வனப் பகுதி அருகேவந்ததும், வேனின் ஹெட் லைட்டை டிம்-பிரைட் செய்து, உள்ளே வீரப்பன் இருப்பதை தனது ஆட்களுக்கு சிக்னல்தந்தார்.

இதையடுத்து தயார் நிலைக்கு வந்தனர் அதிடிரடிப்படையினர். லாரி அருகே வந்ததும் வேனை சடன் பிரேக்போட்டு நிறுத்திவிட்டு வெளியே குதித்தார் சரவணன்.

அடுத்த நொடியே வேனை சுற்றி வளைத்தனர் அதிரடிப்படையினர்.

குண்டுகளை பம்ப் செய்து...

Chandra gowdaமுதலில் வீரப்பன் ஆட்கள் சுட, கையெறி குண்டுகளை வேனில் முன் கண்ணாடி வழியாக வீசி வேனுக்குள்ளேயேவீரப்பனை நிலை குலைய வைத்துவிட்டு, ரெமிங்டன் பம்ப் கன் எனப்படும் சரமாரியாக புல்லட்டுகளை துப்பும்துப்பாக்கிகளால் வெறி தீரும் மட்டும் சுட்டுத் தீர்த்தது அதிரடிப்படை.

அடுத்த சில நிமிடங்களிலேயே வேனில் இருந்து துப்பாக்கியால் சுடுவது நின்று போய்விட, வீரப்பனையும் அவனதுஆட்களையும் வெளியே இழுத்துப் போட்டுப் பார்த்தனர் அதிரடிப்படையினர்.

வீரப்பன் உடலில் மட்டும் 13 புல்லட்டுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குண்டு நெற்றியில் பெரிய ஓட்டைபோட்டுக் கொண்டு, வீரப்பனின் மூளையை சிதறடித்தவாறே, பின் மண்டை வழியாக வெளியேறியிருக்கிறது.

சேத்துக்குளி கோவிந்தன் கண்களை மூடக் கூட அவகாசம் கிடைக்காமல் செத்துப் போயிருந்தான்.

வீரப்பனை கொன்ற ஆபரேஷன் குக்கூன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X