For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிரடிப்படை விரித்த எலெக்ட்ரானிக் வலை

By Staff
Google Oneindia Tamil News

சத்தியமங்கலம்:

ஆபரேசன் குக்கூன் குறித்து தோண்டத் தோண்ட ஏகப்பட்ட தகவல்கள் கிடைத்து வருகின்றன.

மனித உளவாளிகள் நெட்வொர்க்குடன் நவீன எலெக்ட்ரானிக் கருவிகளையும் பயன்படுத்தித் தான் வீரப்பனைப் பிடித்துள்ளதுஅதிரடிப்படை. இந்தத் தகவல்களை அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமார் உறுதி செய்துள்ளார்.

இதற்காக மத்திய அரசின் உதவியுடன் இஸ்ரேலில் இருந்து நவீன தகவல் தொடர்பு கருவிகள் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதே போல இந்த ஆபரேசனில் மிக முக்கிய பங்கு வகித்தவர் தாதா வீரமணியை எண்கெளன்டரில் சுட்டுத் தள்ளிய இன்ஸ்பெக்டர்வெள்ளைதுரை என்றும் தெரியவந்துள்ளது.

எண்கெளன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை:

Velladuraiவிஜய்குமாரின் தலைமையிலான டீம் தான் சென்னையைக் கலக்கிய ரெளடிக் கும்பல் தலைவன் வீரமணியை அவனது ஏரியாக்குள்ளேயேபுகுந்து காலி செய்தது. வீரமணியின் கதையை முடிக்க விஜய்குமார் தேர்வு செய்தது வெள்ளைதுரையைத் தான்.

வீரமணியின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க பிச்சைக்காரன் வேஷத்தில் வட சென்னைப் பகுதியின் கடற்கரையில் பல வாரங்கள்திரிந்தார் வெள்ளை துரை. வீரமணியின் படகுகள் அவனது நண்பர்கள் என எல்லோரையும் இரவு பகலாக கண்காணித்த வெள்ளதுரைஅதற்காக எடுத்த ரிஸ்க் மகத்தானது.

திட்டமிட்டபடியே அதிகாலையில் பீச்சுக்கு கைலி, சட்டையில் போனவர் வீரமணியை டொபுக் என போட்டுத் தள்ளிவிட்டு டாடாசுமோவில் ஏறி சக போலீசாருடன் தப்பி வந்தார். அவருக்கு பதவி உயர்வு தரப்பட்டு சென்னையிலேயே பணியாற்றி வந்தார்.

பின்னர் வெங்கடேச பண்ணையார் எண்கெளன்டரால் விமர்சனத்துக்கு ஆளான விஜய்குமார், கமிஷ்னர் பதவியை விட்டுவிட்டுஅதிரடிப்படைக்குப் போனார். அங்கு செந்தாமரைக் கண்ணன் தலைமையில் ஆபரேசன் குக்கூன் திட்டம் மெதுவாக அரங்கேறிக்கொண்டிருந்தது.

எலெக்ட்ரானிக் சர்வைலன்ஸ் கருவிகள்:

இந்த ஆபரேசனை செந்தாமரைக் கண்ணன் கையாண்டு கொண்டிருந்த விதம் விஜய்குமாருக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட,அவருக்குத் தேவையான எலெக்ட்ரானிக் கருவிகளையும் முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி மத்திய அரசு மூலமாக வரவழைத்துக்கொடுத்தார்.

காட்டுப் பகுதியில் ஆட்கள் நடமாட்டத்தை இரவிலும் பகலிலும் கண்காணிக்கும் சவுண்ட் மற்றும் வீடியோ மானிட்டரிங் கருவிகள், அதன்ரிசீவர்களை காட்டுப் பகுதி மரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டன.

இவற்றில் இருந்து வரும் சிக்னல்களை பூஸ்ட் செய்து அதிரடிப்படை முகாம்களுக்கு அனுப்ப ஆங்காங்கே சிறிய ரகடிரான்ஸ்பான்டர்களையும் மரங்களில் மறைத்துவிட்டு வந்தது அதிரடிப்படை.

மேலும் காட்டுப் பகுதியில் இருந்தபடியே அதிரடிப்படையைத் தொடர்பு கொள்ளவும் போலீஸ் உளவாளிகளுக்கு இந்தக் கருவிகள்உதவின. இதனால் கிட்டத்தட்ட 6 மாத காலமாக வீரப்பன் நடமாட்டம் குறித்த அனைத்து தகவல்களும் அதிரடிப்படைக்கு வந்துகொண்டிருந்தன.

ஆனால், காட்டுக்குள் இருக்கும் வரை அட்வான்டேஜ் வீரப்பனுக்கே என்பதால் காட்டில் நுழைந்து தாக்குதல் நடத்தும் திட்டத்தைஅதிரடிப்படை தவிர்த்துவிட்டது. அவனை காட்டுக்கு வெளியே கொண்டு வருவதற்கான திட்டங்களைத் தீட்டினர்.

STFதீவிரவாதியான வெள்ளைதுரை:

லாரி லோடு மேன்கள், செருப்பு தைப்பவர்கள், தோட்ட வேலையாட்கள், டீக் கடைக்காரர்கள், பஸ் கண்டக்டர்கள் என பல்வேறுஉருவங்களில் அதிரடிப்படையின் உளவாளிகள் வீரப்பனின் ஆட்களை நெருங்க முயற்சித்துக் கொண்டிருக்க,

ஒரு தமிழ்த் தீவிரவாதியை உருவாக்கினால் வீரப்பன் ஆட்களுடன் எளிதில் நெருங்க முடியும் என விஜய்குமாருக்கு தோன்றியிருக்கிறது.

தமிழ்த் தீவிரவாதி மூலம் வீரப்பனுக்கு நெருக்கமான தமிழர் விடுதலைப் படையினரை நெருங்கிட முடியும் என திட்டமிட்ட விஜய்குமார்,அவர்கள் மூலம் வீரப்பனை நெருங்க முடிவு செய்தார்.

இந்த தீவிரவாதி வேஷத்துக்கு யாரைப் போடுவது என்று யோசித்தபோது விஜய்குமாரின் மனதில் வந்து நின்றவர் வெள்ளைதுரை தான்.

வெள்ளைதுரையை ரகசியமாக சென்னை காவல்துறையில் இருந்து அதிரடிப்படைக்கு மாற்றினார் விஜய்குமார். கொடுத்த வேலையைகச்சிதமாக செய்து முடிக்கும் வெள்ளைதுரை, தமிழ்ப் போராளி என்ற முகத்துடன் வன கிராமங்களுக்குள் ஊடுருவிய வெள்ளைதுரை,கொஞ்சம் கொஞ்சம் முழு நேரத் தீவிரவாதியாகவே மாறிப் போனார்.

ஏற்கனவே வனப் பகுதியில் வீரப்பனுக்கு உதவும் ஆட்களுடன் பழகி நெருக்கமாகிவிட்ட உளவாளிகள் மூலம், தமிழர் விடுதலைப்படையினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் வெள்ளைதுரை. இவர்கள் மூலம் ஒரு முறை வீரப்பனையும் அவர் நேரில் சந்தித்தாகத்தெரிகிறது.

இந்த நிலையில் தான் வீரப்பனுக்கு நெருக்கமான கனகராஜ் என்பவரை போலீஸ் ஆளாக மாற்றிக் கொண்டிருந்தார் இந்தக் கும்பலில்ஏற்கனவே ஊடுருவிவிட்ட முருகேசன் என்ற அதிரடிப்படை வீரர். முருகேசனுக்கு பக்கபலமாக இருந்து முழு உதவி செய்தார்வெள்ளைதுரை.

இருவரும் சேர்ந்து நடத்திய நாடகத்தில் வீழ்ந்து போனான் வீரப்பன்.

வேனை ஓட்டிய விஜய்குமாரின் டிரைவர்:

Saravananஅதிரடிப்படை வீரர் சரவணன் வேனை (இவர் விஜய்குமாரின் கார் டிரைவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்குமாரால் நேரடியாககமாண்டோ பயிற்சி அளிக்கப்பட்டவர்) ஓட்ட அதை வீரப்பனிடம் கொண்டு சென்றதும் வெள்ளைதுரைதான். முதலில் சரவணன் மட்டுமேபோனதாக சொல்லப்பட்டது. ஆனால், அதில் வெள்ளை துரையும் இருந்தார் என்பதை அதிரடிப்படை இப்போது உறுதி செய்கிறது.

சரவணன், வெள்ளை துரை கொண்டு வந்த ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலை ஏற்றிவிட்டுவிட்டு காட்டில் இருந்து எஸ்கேப் ஆகிஅதிரடிப்படை முகாமுக்குத் திரும்பிவிட்டார் முருகேசன்.

வேனிலும் எலெக்ட்ரானிக் கருவிகள்:

வீரப்பன் கும்பலை கூட்டி வர அனுப்பப்பட்ட வேனிலும் எலெக்ட்ரானிக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. உள்ளே அவர்கள் பேசும்சத்தத்தை முகாமில் இருந்தபடி கண்காணித்திருக்கிறது அதிரடிப்படையின் சர்வைலன்ஸ் டீம். இதற்கு உதவியதும் காட்டில் ஏற்கனவேஆங்காங்கே மறைவாக வைக்கப்பட்ட டிரான்ஸ்பான்டர்கள் தான்.

வேன் வந்து கொண்டிருக்கும் திசை, வேகம் ஆகியவற்றை இந்த டீம், வேனை மடக்கக் காத்திருந்த அதிரடிப்படையின் 3 குழுக்களுக்கும்லைவாக ரிலே செய்தது.

இதையடுத்து திட்டமிட்டபடி, பாடி பகுதிக்கு வந்தவுடன் ஆம்புலன்சின் ஹெட்-லைட்டால் அதிரடிப்படையின் தாக்குதல் டீமுக்கு உரியசிக்னல் தந்துவிட்டு, வேனை திடீரென நிறுத்திவிட்டு, ஆளுக்கு ஒரு கதவைத் திறந்து கொண்டு வெளியே குதித்துள்ளனர் சரவணணும்வெள்ளைதுரையும்.

வேனில் இருந்து தரையில் குதித்து உருண்டவர்களை, இரு பக்கமும் தயாராகக் காத்திருந்த அதிரடிப்படையினர் இந்த இருவரையும்பாதுகாப்பாக இழுத்துப் போட்ட பின்னரே, வீரப்பன் கும்பல் மீது தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆக, இந்த ஆபரேசனின் மூன்று முக்கிய ஹீரோக்கள் என்றால் அது முருகேன் (வீரப்பன் கும்பலில் ஊடுருவியவர்), அடுத்தவர்வெள்ளைதுரை (தீவிரவாதி வேடத்தில் தமிழர் விடுதலைப் படையினர் மூலமாக வீரப்பனை நெருங்கியவர்), இன்னொருவர் சரவணன்(வேனை ஓட்டிக் கொண்டு போய் வீரப்பனை ஏற்றி வந்தவர்).

இந்த மூவருக்கும் ஏராளமான உளவாளிகள் உதவிகரமாய் இருந்து ஆபரேசனை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆபரேசன் குக்கூன்- முழு பின்னணி தகவல்கள்
வீரப்பனை கொன்ற ஆபரேஷன் குக்கூன்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X