ஆண்டிப்பட்டி ரிசர்வ் தொகுதியாவதை தடுக்க முயற்சி?
சென்னை:
40 சதவீதத்திற்கும் மேல் தலித் மக்கள் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்க தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.அதன்படி, கடந்த 2001ம் ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி குல்தீப் சிங்கை தலைவராகவும், மத்திய தேர்தல் ஆணையர் டாண்டனை செயலாளராகவும் கொண்டசீரமைப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்களும் உறுப்பினர்கள். தமிழகத்தில் இந்தக் கமிட்டிமேற்கொண்ட ஆய்வின்படி சில மாவட்டங்களில் தொகுதிகளைக் கூட்டவும், சில மாவட்டங்களில் தொகுதிகளைக்குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளை 4 ஆக குறைக்கவும், தலித் மக்கள் மிக அதிகமாக வசிக்கும்ஆண்டிப்பட்டி தொகுதியை (முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி) ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கவும்பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அப்படிச் செய்யப்பட்டால் அங்கு தலித் மட்டுமே போட்டியிட முடியும். இதையடுத்து இத் தொகுதியைரிசர்வ் தொகுதியாக்க அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆண்டிப்பட்டியை ரிசர்வ்தொகுதியாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக போடப்பட்டுள்ள மாஸ்டர் பிளானின்படி, ஆண்டிப்பட்டி தொகுதியில் தலித்கள் அதிகமுள்ள 18கிராமங்களை அருகிலுள்ள தொகுதிகளான பெரியகுளத்திலும், சேடப்பட்டியிலும் சேர்த்துவிட்டு, இந்தத்தொகுதிகளில் உள்ள தலித்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளை ஆண்டிப்பட்டியுடன் இணைக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் தலித்களின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டி ஆண்டிப்பட்டியை ரிசர்வ் தொகுதி ஆகாமல் தடுக்கமுயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதியை ஒழிப்பது, நெல்லை மாவட்ட தொகுதிகளின்எண்ணிக்கையை 11லிருந்து 10 ஆக குறைப்பது ஆகிய நடவடிக்கைகளையும் தடுக்க அதிமுக முயற்சித்துவருகிறது. (பெரியகுளம் அமைச்சர் ஓ.பியின் தொகுதியாகும்)
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications