For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமர் கோயில் கட்டியே தீருவோம்: அத்வானி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை தவிர்க்கவே முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.

இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிமுறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேசியத்தைக் காப்பதிலும், கலாச்சாரத்தைக் காப்பதிலும் பாஜக எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பாஜக அதன்அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை.

காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் சவால்களை சமாளிக்கும் விதமாக கட்சியை வலிமைப்படுத்துவதில் கவனம்செலுத்துவேன். 15வது மக்களவை தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைப்பதற்கான களமாக மாற்ற வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் கட்சியின் தேர்தல் வெற்றியை பாதித்துள்ளது. அயோத்தியில்ராமர் கோயில் கட்டுவது தவிர்க்க முடியாதது.

14 ஆண்டுகளுக்கு முன்பு சோம்நாத்தில் இருந்து அயோத்தியா நோக்கி நான் தொடங்கிய ரத யாத்திரைக்குபின்னர் அப்பிரச்சினை திசை மாறியது. அதன்பின்பு பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை ஒதுக்குவதுஎன்பது முடியாத காரியமாகிவிட்டது என்றார் அத்வானி.

வாஜ்பாய் பேச்சு:

பின்னர் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,

அத்வானியின் தலைமையில் பாஜக புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. கட்சித் தொண்டர்கள் பரஸ்பரம்ஒத்துழைப்பு தந்து கட்சியை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல ஒத்துழைக்க வேண்டும்.

குழப்பத்தின் காரணமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி நெடுநாள்நீடிக்காது. ஏனெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் வேறுபாடுகள்அதிகரித்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.

இதனையடுத்து கூட்டத்தில் மத்திய அரக்ை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,

வாஜ்பாய் தலைமையிலான அரசில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. அந்த வளர்ச்சிஇப்போது முடங்கிவிட்டது.

விவசாயம், உள்நாட்டு வளர்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ் தலைமையிலான அரசு புறக்கணித்து வருகிறது. இதுசரிசெய்யப்படவில்லை என்றால் தொழில்துறை, கட்டடத்துறை ஆகியவவையும் பாதிப்பிற்குள்ளாகும்.

மத்திய அமைச்சரவையில் கிரிமினல் குற்றவாளிகள் இடம் பெற்றுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் 3வது அதிகாரமையமாக செயல்பட்டு அரசை அச்சுறுத்துகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்பில் காங்கிரஸ் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. வட கிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்திலிருந்து ஊடுறுவிய தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த அது தவறிவிட்டது.

இவ்வாறு பாஜக தீர்மானங்களை இயற்றியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X