முகம்மது அலிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடியில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 30,000 கோடி போலி முத்திரைத்தாள் மோசடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகம்மது அலி, உதவிபோலீஸ் கமிஷனர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகிய மூன்று பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
அவர்கள் 3 பேரும் பெங்களூல் தங்கியிருக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இந்தநிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி 3 பேரும் சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அருள்ராஜ், முகம்மது அலி, சங்கர் ஆகிய இருவரும் பெங்களூரில் தங்கியிருக்கவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. அதற்குப் பதில் இருவரும் சென்னையில் தங்கியிருந்து தினசரிசிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
அதேபோல, ராமசாமி சாது மதுரையில் தங்கியிருந்து தினசரி மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications