ஊழியர் சங்கங்களுக்கு தமிழக அரசு அறிவுரை
சென்னை:
அரசு நிர்வாகம் முறையாகவும், அரசின் திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையும் வகையிலும், அரசுமேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில், அரசு ஊழியர் சங்கங்கள் தங்களதுமுழு ஈடுபாட்டையும் பணியில் காட்ட வேண்டும் என்று ஊழியர் சங்கங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கைஅனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு வேலை நிறுத்த காலத்தின்போது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 27 ஊழியர் சங்கங்களுக்குசமீபத்தில் தமிழக அரசு மீண்டும் அங்கீகாரம் வழங்கியது. சங்க அலுவலகங்களின் சாவிகளையும் சங்கநிர்வாகிகளிடம் அரசு சமீபத்தில் கொடுத்தது.
இந் நிலையில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஊழியர் சங்கங்களுக்கு மீண்டும்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கான உத்தரவு இடம் பெற்றுள்ளது.
மேலும், அரசு ஊழியர் சங்கங்களுக்கு பல அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் தங்களது பொறுப்புகளை ஒரு நொடி கூட மறந்து விடக் கூடாது. அரசு மேற்கொள்ளும்நடவடிக்கைகள் மக்களை சென்றடைய ஊழியர் சங்கங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குறைகள் இருக்கலாம். இருப்பினும் அவற்றை விட மக்கள்பணியாற்றுவதே முக்கியம், முதன்மையான நோக்கம் என்பதை ஊழியர்களும், ஆசிரியர்களும் மனதில் கொண்டுசெயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications