அமெரிக்க அதிபர் தேர்தல்: பின்லேடன் அறிவுரை

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ:

முஸ்லீம்களை மிரட்டுவதை அமெரிக்கா கைவிட்டால், நியூயார்க்கில் நடந்தது போன்ற இன்னொரு தாக்குதலை தவிர்க்கலாம் என ஒசாமாபின் லேடன் கூறியுள்ளார்.

4 நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்லேடன். அதில்,

அமெரிக்க மக்களாகிய உங்களது பாதுகாப்பு ஜார்ஜ் புஷ்ஷின் கையிலோ, அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஜான் கெர்ரியின் கைகளிலோஇல்லை. உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது, உங்கள் நாட்டின் கொள்கைகளில் தான் உள்ளது.

எந்த நாடு எங்களது (முஸ்லீம்கள்) பாதுகாப்பில் தலையிடவில்லையோ, அந்த நாட்டுக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. யார் எங்களைமிரட்டவில்லையோ அவர்களை நாங்கள் ஏதும் செய்வதில்லை. எங்கள் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காதவரை உங்களுக்கு தீங்குநேராது.

செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் உத்தரவிட்டேன். (இத் தாக்குதலுக்கு பின் லேடன் பொறுப்பேற்பதுஇதுவே முதன்முறை) பாலஸ்தீன, லெனான் மக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அநியாயங்களால் பாதிக்கப்பட்டதற்கு பழிவாங்கவே அந்தத் தாக்குதல் நடந்தது.

செப்டம்பர் 11 தாக்குல் நடந்து 4 வருடமாகியும் ஜார்ஜ் புஷ் தொடர்ந்து அமெரிக்க மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று வருகிறார்.இதனால் மீண்டும் அதே போன்ற தாக்குதல் நடத்த வேண்டிய நிலைக்கு எங்களைத் தள்ளி வருகிறார்.

நாங்கள் நியுயார்க்கின் கட்டங்களை விமானங்களை வைத்துத் தாக்கிக் கொண்டிருக்க, ஜார்ஜ் புஷ்ஷோ ஒரு பள்ளிக் கூடத்தில்குழந்தைகளுக்கு ஆட்டுக் கதை சொல்லிக் கொண்டிருந்தார். 20 நிமிடத்தில் தாக்குதல்களை நடத்தி முடிப்பதாக முகமம்மது அட்டாஎன்னிடம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அமெரிக்க ராணுவத்தின் தலைவரான ஜார்ஜ் புஷ் எங்கள் தாக்குதலைத் தடுக்க முடியாமல், எங்களுக்கு 3 மடங்கு அதிகம் நேரம்தந்தார். இதனால் தாக்குதலை நிதானமாக நடத்தி முடித்தோம். அதற்காக கடவுளுக்கு நன்றி. தன் மக்கள் தன் உதவியை எதிர்பார்த்து துடித்தநேரத்தில் புஷ் அவர்களுக்கு உதவ முடியவில்லை.

இவ்வாறு லேடன் கூறியுள்ளார். அல்-ஜசீராவுக்கு 5 நிமிடம் ஓடக் கூடிய வீடியோவை லேடன் அனுப்பியுள்ளார். அதில் ஒரு நிமிடகாட்சியை மட்டும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

சுமார் ஓராண்டுக்குப் பின் லேடன் அனுப்பியுள்ள வீடியோ இது. பிரெளன் நிற திரைக்கு முன் போடப்பட்ட மேஜையின் அருகே நின்றவாறுலேடன் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமீபத்தில் தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டாக்மெக்லெலன் தெரிவித்துள்ளார்.

கெர்ரி எச்சரிக்கை:

இந்த வீடியோ ஒளிபரப்பான உடனேயே ஜான் கெர்ரி லேடனைத் தாக்கி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால்பின் லேடனை நிச்சயம் தேடிப் பிடித்து அழிப்போம் என்று கெர்ரி கூறியுள்ளார்.

இராக்கில் 1 லட்சம் பேர் பலி?:

இதற்கிடையே இராக்கில் போர் தொடங்கிய இதுவரை 1 லட்சம் பொது மக்கள் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சிலும், இராக்கியப் படைகளின் தாக்குதலிலும், தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் ஏற்பட்டசாவுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டும் என இராக் பாடி கவுன்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+