சிவகாசி நகராட்சி அதிமுக உறுப்பினர் கொலை
சிவகாசி:
சிவகாசி நகராட்சியின் அதிமுக உறுப்பினர் பாஸ்கரன் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சிவகாசி நகராட்சியின் 26 ஆவது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் (35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. பின்னர்அதிலிருந்து அவர் விடுதலையானார். இவருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.
இந் நிலையில் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தில் தனது நண்பர் ஜெயராஜுடன் ஒரு பாஸ்கரன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவ்விருவரையும் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் வழிமறித்து, பாஸ்கரனை அரிவாளால் பல இடங்களில்வெட்டியது.
இதில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். தடுக்க முயன்ற ஜெயராஜூக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவம்தொடர்பாக சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
ஜெயலலிதா இரங்கல் செய்தி:
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பாஸ்கர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இதற்குக்காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பாஸ்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக சார்பில் குடும்ப நலநிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications