மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அத்வானி
சென்னை:
எதிக்கட்சி வரிசையில் அமரும்படி மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக முழுமனதுடன் ஏற்கிறது என்று பாஜக தலைவர் அத்வானிதெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் வழியில் அத்வானி சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில்பத்திரிக்கையாளர்களின் அரசியல் தொடர்பான கேள்விகளை மறுத்த அவர், உங்களுக்காக (பத்திரிக்கையாளர்கள்) சிலவார்த்தைகள் பேசுகிறேன் என்று கூறி அளித்த பேட்டியிலிருந்து:
கடந்த காலத்தில் எங்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த அனுபவம் மட்டுமே இருந்தது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்புநாங்கள் ஆட்சியைப் பிடித்தோம். வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நல்ல முறையில் தொடர்வதற்கு கூட்டணிக் கட்சிகள்ஒத்துழைப்பு அளித்தன.
பாஜக ஆட்சியில் பாதுகாப்பு, பொருளாதாரம், ஜனநாயகம், சமூக நல்லிணக்கம் என அனைத்து துறைகளில் நாடு நல்ல வளர்ச்சிகண்டது. இருப்பினும் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமரும்படி மக்கள் தீர்ப்பளித்தார்கள். இதை நாங்கள்ஏற்றுக்கொள்கிறோம். இந்த சவாலை வெல்வோம்.
நீண்ட காலத்திற்குப் பின் என்னை நம்பி பாஜக தலைமைப் பொறுப்பு தரப்பட்டுள்ளது.
இன்று மாலையே டெல்லி திரும்புகிறேன். நாளை எனது தொகுதியான காந்தி நகருக்குச் செல்கிறேன் என்று கூறினார்.
முன்னதாக அத்வானியின் பாதுகாப்பாளர் ஒருவர் டிவி கேமராமேன் ஒருவரையும், பத்திரிக்கையாளர்களையும் பிடித்துத்தள்ளியதில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications