நடிகை ரம்பாவின் தந்தை மீது செக் மோசடி வழக்கு
மதுரை:
நடிகை ரம்பாவின் தந்தை மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர்கள் சங்கரநாயகம் மற்றும் சரவணன். இவர்களிடம் ரம்பா, அவரதுதந்தை வெங்கடேஸ்வர ராவ், தாயார் உஷா ராணி, சகோதரர் சீனிவாஸ் ஆகியோர் ரூ. 20 லட்சம் கடன் வாங்கினர்.
த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்புக்காக இந்தப் பணத்தை ரம்பா வாங்கினார். படம் வெளியாகி 4 வாரத்தில் பணத்தைத் திருப்பித்தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி முதல்கட்டமாக ரூ. 7 லட்சத்துக்கு வெங்கடேஸ்வர ராவ் ஒரு செக் தந்தார். ஆனால், அதை ரெங்கநாயகி பிலிம்ஸ்நிறுவனத்தின் பார்ட்னர் சரவணன் மாற்ற முயன்றபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து ரம்பா குடும்பத்தினருக்கு ரெங்கநாயகி பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் அதைகண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ரம்பாவின் தந்தை மீது சரவணன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து ரம்பாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications