நான் என்ன வீரப்பனா?: சங்கராச்சாரியார் ஆவேசம்
சென்னை:
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு தனி விமானத்தில் கொண்டு வரப்பட்ட ஜெயேந்திரர், போலீஸ் வேனில் ஏற மறுத்து போலீஸாருடன்கடுமையாக வாக்குவாதம் செய்தார்.
ஆந்திர மாநிலம் மகபூப் நகர் பகுதியில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திரர் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
விமான நிலையத்திலிருந்து அவரை காஞ்சிபுரம் அழைத்துச் செல்ல போலீஸ் வேன் தயாராக இருந்தது.
ஆனால் அவர் அதில் ஏற மறுத்தார். நான் என்ன வீரப்பனா, எனக்கு இவ்வளவுதான் மரியாதையா என்று போலீஸ் அதிகாரிகளிடம் அவர்ஆவேசமாகக் கேட்டார்.
இதையடுத்து அவரை போலீஸ் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். எஸ்.பி. பிரேம்குமார், சங்கராச்சாரியாரிடம் சென்று, உங்களதுமடத்துக்குச் சொந்தமான டாடா சுமோ வாகனத்திலேயே நீங்கள் செல்லலாம் என்று கூறியதையடுத்து அவர் சமாதானமடைந்தார்.
பின்னர் மடத்துக்குச் சொந்தமான டாடா சுமோ காரிலேயே காஞ்சிபுரத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு வேலூருக்குக் கொண்டு செல்லப்பட்டபோது போலீஸ் வேனில் தான் அழைத்துச் செல்லப்பட்டார்.
நோ சொன்ன நீதிபதி:
முன்னதாக காஞ்சிபுரத்தில் மாவட்ட நீதிபதி உத்தமராஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது பேசிய சங்கராச்சாரியார்,தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதாகவும், 70 வயதுக்கு மேல் ஆகி விட்டதாகவும், இதனால் தனக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார்.
ஆனால் இதுகுறித்து சிறை நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்ட நீதிபதி, சங்கராச்சாரியாரின்கோரிக்கையை ஏற்கவில்லை.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications