கடந்த ஆண்டே புதிய மடாதிபதி தேர்வு?
காஞ்சிபுரம்:
| கைதான ஜெயேந்திரர் மற்றும் இளையவர் விஜயேந்திரரை அடுத்து சங்கர மடத்தின் அடுத்த மடாதிபதி பதவிக்கு ஒரு வாலிபர்கடந்த வருடமே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ்வதி கைதாகிவிட்ட நிலையில், அவர் தனது பதவியைத் துறந்தால் அப் பதவிக்குஇளையவரான விஜயேந்திரர் வரலாம். ஆனால், விஜயேந்திரரின் தம்பி ரகு தான் கொலையாளிகளையே தயார் செய்தார் என்றுகூறப்படும் நிலையில் இளைவரின் பெயரும் இந்த விவகாரத்தில் சிக்கி பிரச்சனையாகிவிட்டது. விஜயேந்திரரும் கைதாகக் கூடும் என்று கூறப்படுவதால், காஞ்சிக்கு வராமல் ஆந்திராவிலேயே தங்கியிருக்கிறார். |
|
ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்தால் மட்டுமே விஜயேந்திரர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
விஜயேந்திரரின் தம்பி ரகுதான் கொலையாளிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்தவர் என்று போலீஸ் தரப்பு கூறுவதுகுறிப்பிடத்தக்கது. இரு மடாதிபதிகளும் காஞ்சிபுரத்தில்இல்லாததால், சங்கர மடம் சுத்தமாக செயலிழந்து போயுள்ளது.
இதற்கிடையே விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் மடாதிபதியாக பொறுப்பேற்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுகூறியுள்ளார்.
புதிய மடாதிபதி தேர்வு:
இதற்கிடையே இந்த இருவருக்கும் பிறகு மடத்துக்குத் தலைமை தாங்க கடந்த ஆண்டே ஒருவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாககாஞ்சி மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிட விற்பன்னர்களால் தேர்வு செய்யப்பட்ட அவர், அடுத்த வருடம் தை மாதத்தில் வாரிசாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது.
காஞ்சியில் உள்ள வேத பாடசாலையில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவருக்குப் பதிலாக கும்பகோணம் பாடசாலையைச் சேர்ந்தவரை தேர்வு செய்ய வேண்டும் என மடத்திலேயே எதிர் குரல்கள் எழ ஆரம்பித்திருந்தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொலை விவகாரம் வெடித்துவிட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்













Click it and Unblock the Notifications