For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பு சரணடைகிறான்?: மீண்டும் தலைகாட்டும் ரகு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & காஞ்சிபுரம்:

Appuசங்கரராமன் கொலையை செய்த கூலிப் படைத் தலைவனான அப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது நீதிமன்றம்ஒன்றில் சரணடையக் கூடும் என்று உளவுப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த அப்பு தலைமையிலான கூலிப் படைதான், காஞ்சிபுரம் சங்கரராமனைபடுகொலை செய்தது. இந்தத் திட்டத்திற்கு மூல கர்த்தா காஞ்சி சங்கராச்சாரியார் என்கிறது போலீஸ்.

ஜெயேந்திரர் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விட்ட நிலையில் அப்பு தலைமறைவாகிவிட்டான். அவனது மகன் அமெரிக்காவில் இருப்பதால் அவனும் அமெரிக்காவுக்குத் தப்ப முயலலாம் என போலீசார் கருதினர்.

இதையடுத்து அவனைப் பிடிக்க மத்திய அரசின் உதவியையும் நாடினர்.

இந் நிலையில் தலைமறைவாக உள்ள அப்பு சரணடைய முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது. திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம்ஒன்றில் அவன் சரணடையக் கூடும் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய நீதிமன்றங்களுக்கு அருகேயும்,நகர எல்லைகளிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

2 கொலையாளிகள் ஆஜர்:

இதற்கிடையே சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த ரஜினி என்ற சின்னா மற்றும் கதிரவன்ஆகிய இருவரையும் போலீஸார் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சங்கரராமனைக் கொன்ற அப்புவின் கூலிப் படையில் இடம் பெற்றிருந்தவர்கள் ரஜினியும், கதிரவனும். இவர்கள் இருவரையும்ஐந்து நாட்களுக்கு முன் நீதிமன்ற அனுமதியுடன் போலீசார் தங்கள் காவலில் எடுத்தனர். அவர்களிடம் தீவிர விசாரணைநடத்தினர்.

போலீஸ் காவல் முடிந்துவிட்ட நிலையில் இருவரும் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது ரஜினியை மீண்டும் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தமராஜன் உத்தரவிட்டார்.

கதிரவனிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டதால் அவனை மேலும் 2நாட்களுக்கு போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் விவரம்,

1. ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சிபுரம்

2. ஆனந்தகுமார், சென்னை

3. சேகர், சென்னை

4. ரஜினிகாந்த் என்கிற சின்னா, சென்னை

5. குணா ரவி, சென்னை

6. பழனி, சென்னை

7. செந்தில் குமார், சென்னை

8. மீனாட்சி சுந்தரம், சென்னை

9. எஸ்.குமார், சென்னை

10. கதிரவன், சென்னை

11. ஆறுமுகம், சென்னை

12. பாஸ்கர், சென்னை

13. சில்வஸ்டர், சென்னை

காஞ்சி மடத்தால் செட் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான போலி குற்றவாளிகள்,

14. தேவராஜ், சென்னை

15. பாண்டியன், பாடி, சென்னை

16. அருண், சென்னை

17. சதீஷ், சென்னை

18. ஆறுமுகம், சென்னை

வழக்கை திசை திருப்பும் வகையில் இந்த 5 பேரும் சங்கராச்சாரியார் மற்றும் இளையவர் விஜயேந்திரரின் தம்பி ரகுவால்செட்-அப் செய்யப்பட்டவர்கள்.

மீண்டும் தலைகாட்டும் ரகு:

Raguஇந் நிலையில் இளையவரின் தம்பி ரகு திடீரென மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளார். இந்தக் கொலையில்சங்கராச்சாரியாருக்கு வலது கரமாக இருந்ததாகக் கருதப்படும் ரகு யார் கண்ணிலும் தென்படாமல் இருந்து வந்தார்.

அவர் விஷயத்தில் போலீசாரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. இது குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே அவரை கோழிஅமுக்குவது மாதிரி போலீஸ் தூக்கிக் கொண்டு போய்விட்டது தெரிந்தது.

தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ரகுவை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவந்தனர். இப்போது சங்கராச்சாரியார் பக்கமே முழு பாய்ச்சலையும் காட்டி வரும் போலீசார், ரகுவை மெதுவாக வெளியில்விட்டுள்ளனர்.

இதனால் அவரை இன்று மடத்தில் தனது அண்ணனான இளையவர் விஜயேந்திரருடன் பார்க்க முடிந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X