For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னொரு கொலைக்கும் திட்டமிட்ட ஜெயேந்திரர்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சங்கரராமன் தவிர, தன்னைப் பற்றி அவதூறு கடிதங்கள் எழுதியதற்காக ராதாகிருஷ்ணன் என்பவரையும் கொலை செய்யஜெயேந்திரர் திட்டமிட்டிருந்ததாக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் ஜெயேந்திரரின் கைது குறித்து ஜெயலலிதா அளித்த விளக்கம்:

பல அதிர்ச்சி தரும் உறுதியான தகவல்கள் கிடைத்த பின்பே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 9ம் தேதி சென்னையில் பிடிபட்ட இரண்டு பேரிடமிருந்து, சங்கரராமன் கொலையில் ஜெயேந்திரருக்குத் தொடர்புஇருப்பதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. கொலையாளிகளுக்கு சங்கர மடத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பணம்வழங்கப்பட்டிருப்பதற்கான ஆதாரம் உள்ளது.

கொலையில் ஜெயேந்திரருக்கு தொடர்பு இருப்பதற்கான முக்கியமான சில ஆதாரங்கள் சங்கரராமன் வீட்டிலிருந்துகைப்பற்றப்பட்டன.

மேலும் வழக்கை திசை திருப்பும் வகையில் போலியாக 5 பேரை, கொலையாளிகள் என்று சரணடையச் செய்ததிலும்ஜெயேந்திரரின் பங்கு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கொலைக்குப் பின், கொலையாளிகள் ஜெயேந்திரருடன்தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ், முன்னாள் மத்திய அமைச்சர் முரளி மனோகர் ஜோஷிஆகியோர் குற்றம் சாட்டுவது போல், இந்தக் கைது சட்டத்தை மீறிய செயல் அல்ல. சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர்கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைள் அனைத்தும் சட்டத்திற்குஉட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே.

சட்ட ஒழுங்கைக் காப்பற்றவே ஜெயேந்திரர் இரவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உரிய மரியாதையும் மதிப்பும்வழங்கப்பட்டது. எந்த நேரத்திலும் அவர் துன்புறுத்தப்படவில்லை.

கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் ராதாகிருஷ்ணன் என்பவரும், அவரது மனைவியும் தாக்கப்பட்டதுதொடர்பாக ஜெயேந்திரர் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்து வரும் போலீஸாரேஇப்போது அந்த வழக்கையும் விசாரிக்கின்றனர்.

அந்த வழக்கிலும், தன்னைப் பற்றி அவதூறு கடிதங்கள் எழுதியதற்காக ராதாகிருஷ்ணனைக் கொலை செய்ய ஜெயேந்திரர்திட்டமிட்டிருந்ததாக போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளது.

அரசுக்குக் களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றவேண்டுமென்பதற்காகத்தான் இந்த அரசு காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறைக் காணிப்பாளராக இருந்த பிரேம்குமாரை கடலூர்மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளராக மாறுதல் செய்தது என்று ஒரு சிலர் கூறி உள்ளனர். பிரேம்குமார், மாறுதல்செய்யப்பட்ட ஆணை உள் துறையால் சங்கரராமன் கொலை செய்யப்படுவதற்கு முதல் நாளே வெளியிடப்பட்டு விட்டது.

சங்கரராமன் கொலை செய்யப்பட்ட பின்னர் 9.9.2004 அன்று பிரேம்குமார் கடலூர் மாவட்ட காவல் துறைக்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றார். இருப்பினும் இந்த விசாரணை பிரேம்குமார் தலைமையில்தான் நடைபெற்று வருகிறது.

காஞ்சி சங்கரமடத்தை கையகப்படுத்தவோ அல்லது முடக்கும் எண்ணமோ தமிழக அரசிற்கு இல்லை.

இந்தப் பிரச்சினையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மிகுந்த உறுதியுடன், தமிழ்நாடு அரசு செயல்படுத்திஉள்ளது என்று ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X