• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

நாகலாந்து தப்ப திட்டம்: கொலையாளி வாக்குமூலம்

By Staff
|

காஞ்சிபுரம்:

Kathiravan

கதிரவன்

சங்கரராமன் கொலை வழக்கில் கைதான கதிரவன், கொலைக்குப் பின் நாகலாந்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாககூறியுள்ளான்.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதானவர்களில் கதிரவன், சின்னா ஆகியோரை போலீஸார் 2 நாட்கள் தங்களது காவலில்வைத்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையின்போது அப்ரூவராக மாறிவிட அவன் முன் வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் 2வதுமாஜிஸ்டிரேட் தாமோதரன் முன் கதிரவன் ஆஜர்படுத்தப்பட்டான்.

அவரிடம் கதிரவன் சுமார் 20 நிமிடங்கள் ரகசிய வாக்குமூலம்அளித்தான். அவன் வாக்குமூலம் தந்தபோது யாரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. பூட்டிய அறையில் அவன்வாக்குலமூலம் தந்துள்ளான்.

முன்னதாக போலீசாரிடம் கதிரவன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

எனது தந்தை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வீட்டில் வேலை பார்த்தார். நான் சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்புபடித்தேன். கல்லூரி கைப்பந்து அணியில் நான் விளையாடினேன். பெரிய விளையாட்டு வீரனாக வரவேண்டும் என்பது எனதுகனவாக இருந்தது.

ஆனால் 2,000ம் ஆண்டில் அப்புவை சந்தித்த பின் எனது வாழ்க்கை அப்படியே மாறி விட்டது.

அப்போது அப்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாகன கட்டணம் வசூலிக்கும் காண்டிராக்ட் எடுத்திருந்தார். அதில்கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கும் சூப்பர்வைசர் வேலையை எனக்குத் தந்தார். மாதம் ரூ.2,000 சம்பளம்.

அந்த சமயத்தில் அப்பு ஆந்திராவிலிருந்து சந்தன கட்டையும், செம்மரக் கட்டையும் சென்னைக்கு கடத்தி வருவார். அந்தமரக்கட்டைகளை பதுக்கி வைக்க எம்ஜிஆர் வீடு அருகே ஒரு குடோனை நான் வாடகைக்கு பிடித்து கொடுத்தேன்.

இதனையடுத்து என்னை அவரது நேர்முக உதவியாளராக நியமித்து, மாதம் ரூ.10,000 சம்பளம் கொடுத்தார். அவருக்கு நான் கார்டிரைவராகவும் இருந்தேன்.

ஜெயேந்திரரை அப்பு அடிக்கடி சந்திப்பார். அப்போது சங்கர மடத்துக்கு எதிராக செயல்பட்ட மந்தைவெளிராதாகிருஷ்ணனையும், ஆயிரம் விளக்கு மாதவனையும் தாக்குதல் நடத்தி மிரட்டும் வேலை அப்புவிடம் கொடுக்கப்பட்டது.

Kathiravan

முகத்தை மூடியபடி நீதிமன்றத்திற்கு வந்து செல்லும் கதிரவன்

அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி, மிரட்ட வேண்டும். இந்த வேலையை அப்பு என்னிடம் ஒப்படைத்தார். சங்கரமடத்தின் பெயரும், அப்புவின் பெயரும் வெளியில் வராதபடி நான் காரியத்தை செய்து முடித்தேன். இதனால் அப்புவிடம் எனக்குநல்ல பெயர் கிடைத்தது.

இந் நிலையில்தான் ஜெயேந்திரருக்குத் தொல்லை கொடுக்கும் சங்கரராமனை தீர்த்துக் கட்ட வேண்டும் என்று அப்பு என்னிடம்செப்டம்பர் 1ம் தேதி கூறினார்.

செப்டம்பர் 2ம் தேதி காரியத்தை முடிக்க உத்தரவிட்டு ரூ.10 லட்சம் கொடுத்தார். நான் ரெளடி சுந்தர் மூலம் சின்னாவைவரவழைத்தேன். நான், சின்னா, அம்பிகாபதி, மாட்டு பாஸ்கர், சேகர் ஆகிய உட்பட 6 பேர் காஞ்சிபுரம் சென்றோம். அன்றுசூழ்நிலை சரி இல்லாததால் கொலை செய்ய முடியவில்லை.

இதனால் கோபமடைந்த அப்பு, ஜெயேந்திரர் வேறு கூலிப்படையிடம் கொலைப் பணியை கொடுக்கப் போவதாக சொல்கிறார்.உடனே சங்கரராமனை தீர்த்துக் கட்டுங்கள். உங்கள் அனைவருக்கும் ரூ.50 லட்சம் வரை கூலி கிடைக்கும். எனக்கும் ரூ.2 கோடிவரை ஆதாயம் கிடைக்கும் என்று அப்பு கூறினார்.

சங்கரராமன் உயிர் உடனே போகும் வகையில் மூளை சிதறும்படி தலையில் வெட்ட அப்பு உத்தரவிட்டிருந்தார். செப்டம்பர் 3ம்தேதி சங்கரராமனை அவரது வீட்டில் வைத்து தீர்த்துக் கட்டவே முதலில் திட்டமிட்டோம்.

ஆனால் அவரோ வீட்டுக்கு வராமல் கோயிலிலேயே இருந்தார். கோவிலுக்குள் இருந்தாலும் பரவாயில்லை. முடித்து விடுங்கள்என்று அப்பு செல்போனில் கூறினார்.

நான் கோயிலுக்கு வெளியில் நின்று கொண்டேன். மற்றவர்கள் கோயிலுக்கு சென்று சங்கரராமனை தீர்த்துக் கட்டினார்கள்.சங்கரராமன் தலையில் 5 வெட்டு வெட்டி கொன்றதாக சின்னா என்னிடம் கூறினான்.

உடனே இதை அப்புவுக்கு செல்போன் மூலம் தெரிவித்தேன். சங்கரராமன் கொலைக்கு கூலியாக ரூ.50 லட்சம் பேசி, இறுதியில் 42லட்சம் வரை தரப்பட்டது. ஆனால் பணம் எல்லோருக்கும் ஒழுங்காக போய் சேரவில்லை.

சென்னை காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் மூலம்தான் பணம் தரப்பட்டது. இந்த கொலைக்குப் பின் அப்பு தனது வாரிசாகஎன்னை நியமித்து, அவரது கைத்துப்பாக்கியையும் என்னிடம் கொடுத்தார்.

அமெரிக்கா சென்று செட்டில் ஆகப்போவதாக கூறி விட்டு ஆந்திராவில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு சென்று விட்டார்.

நானும், சுந்தரும் நாகலாந்து செல்ல திட்டமிட்டு புறப்பட தயாரானோம். இதற்கிடையில் போலி குற்றவாளிகளை சரண் அடையவைப்பதில் சுந்தருக்கும், சின்னாவுக்கும் இடையே பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. 2 பேருக்கு பேசியபடி பணம் போய்சேராததால் அவர்கள் போலீசாரிடம் காட்டிக் கொடுத்து விட்டனர்.

நானும், சுந்தரும் நாகலாந்து புறப்பட தயாராகி, கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகில் நண்பர்களுடன் சேர்ந்து கடைசியாகமது சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீஸார் எங்களை வளைத்து விட்டனர்.

நான் துப்பாக்கியை எடுத்து சீனிவாசனை சுட முயன்றேன். அப்போது பின்னால் நின்ற போலீஸ்காரர் என் துப்பாக்கியை தட்டிவிட்டார். இல்லாவிட்டால் சுட்டு தள்ளி விட்டு நாகலாந்து சென்று இருப்போம் என்று கதிரவன் கூறியுள்ளான்.

கதிரவனிடமிருந்து 10 செல்போன்கள், கைத்துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X