துணை ஜனாதிபதி ஷெகாவத் வீட்டில் திருட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத் வீட்டில் ரூ.50, 000 மதிப்புள்ள பொருட்கள் திருடு போயின.
டெல்லி, மெளலானா ஆஸாத் சாலையில் துணைக் குடியரசுத் தலைவரின் வீடு உள்ளது. இங்கு துணைக் குடியரசுத் தலைவரின்உதவியாளரின் அலுவலக அறையில் இருந்து சிடி உள்ளிட்ட சில பொருட்கள் திருடு போயுள்ளன. இவற்றின் மொத்த மதிப்புரூ.50,000 ஆகும்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணைக் குடியரசுத் தலைவர் மாளிகையில்பலத்த போலீஸ் காவல் இருக்குமாதலால், வீட்டில் இருக்கும் யாரோதான் திருட்டை செய்திருக்க வாயப்பிருப்பதாக போலீஸார்கருதுகின்றனர்.
இதனால் வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் உள்ளே தங்கியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications