என்னை கொல்ல திட்டம்: அப்பு தலைமறைவு பேட்டி
சென்னை:
என்கெளன்டர் மூலம் போலீஸார் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதால் தான் சரணடையாமல் இருப்பதாக கூலிப்படைத்தலைவன் அப்பு கூறியுள்ளான்.
சங்கரராமன் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான அப்பு வார இதழுக்குத் தந்துள்ள தலைமறைவுபேட்டியில்,
சங்கரராமன் கொலைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கதிரவன் (இந்த வழக்கில் அப்ரூவராகி போலீசாருக்கு சுளையாகதகவல் தந்தவன்) என்னுடன் இருந்தவன்தான். என்னுடன் இருந்தவர்கள் செய்யும் குற்றத்திற்கெல்லாம் நான் பொறுப்பாக விடமுடியாது.
இந்து மதத்தில் மிகவும் நம்பிக்கை உடையவன் என்ற முறையில் நான் ஜெயேந்திரரைச் சந்தித்திருக்கிறேன். மற்றபடி இந்தக்கொலை தொடர்பாக எங்கள் இருவருக்கும் இடையே எந்தச் சந்திப்பும் நடந்தது இல்லை.
நான் கூலிக்குக் கொலை செய்யும் கொலைகாரன் இல்லை. சங்கரராமன் கொலையை பேப்பரில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்.
நான் சரண் அடையாமல் இருப்பதற்குக் காரணம், என்கெளண்ட்டர் என்ற பெயரில் என்னைத் தீர்த்துக் கட்டவே போலீஸ்முடிவெடுத்திருப்பதுதான். என் மீது அக்கறை கொண்ட நெருங்கிய போலீஸார் சிலர் இதை என்னிடம் தெரிவித்தனர். எனவேதான்இப்படித் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளான்.
இவன் கேரளத்தைச் சேர்ந்தவன் என்று முதலில் தகவல்கள் வந்தன. ஆனால், இவன் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான் என்றுதெரியவந்துள்ளது. எல்லா கட்சிகளிலும் விஐபிக்களை விலைக்கு வாங்கி வைத்துக் கொண்டு, பெரிய அளவில் போதைகடத்தல், கொலைகள், ஆள் கடத்தல் என்று வாழ்ந்து வந்தவன்.
இவனே சொல்வதைப் போல இவனுக்கு சில போலீஸ் அதிகாரிகளும் நெருக்கமாக இருந்ததும் உண்மையே. அவர்களுக்கும்அவ்வப்போது பிச்சை போட்டுள்ளான் இந்த அப்பு.












Click it and Unblock the Notifications