வாகன புகை: தமிழகத்துக்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

வாகனப் புகையால் சுற்றுச்சூழலுக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிதாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெங்களூர், ஹைதாராத், லக்னெள, கான்பூர், அகமதாபாத், சோலாபூர் ஆகிய நகர்களில் வாகனப் புகையால்சுற்றுச்சூழல் மிக மோசமாகிக் கொண்டிருப்பதாகக் கூறியும், அதைத் தடுக்க சில யோசனைகளை முன் வைத்தும் சுற்றுச்சூழல் மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒரு மனு தாக்கல் செய்தது.

வாகனப் புகையால் ஏற்படும் மாசுவைத் தடுக்க புதிய விதிமுறைகளை அமலாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவுபிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பான கண்காணிப்பை மத்திய தரைவழிப் போக்குவரத்துஅமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் சபர்வால், அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், மத்திய அரசுக்கும், தமிழகம்,ஆந்திரம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிர ஆகிய மாநில அரசுகளுக்கும் பதில் கோரி நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+