ஆசிரமத்தை ஏமாற்றிய ஆசிரமம் !
உடுமலை:
சென்னை சாமியார் சதுர்வேதியிடம் தன்னுடைய பணம், நகைகளை இழந்துள்ளதாக உடுமலையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்றபெண் புகார் கூறியுளளார்.
சமீபத்தில் தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திய வழக்கில் சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பலபாலியல் புகார்களும் சொல்லப்படுகின்றன. அவரது கோவை, ஆந்திர ஆசிரமங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
சதுர்வேசி சுவாமிகளும் ஆண்மை பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டார்.
இந் நிலையில் உடுமலையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை காவல்துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில்சதுர்வேதி சாமியார் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடுமலையிலிருந்து அமராவதி நகர் செல்லும் வழியில் திப்பிப்பாறை என்ற இடத்தில் மூகாம்பிகை ஆசிரமத்தை கடந்த 5ஆண்டுகளாக நடத்தி வருபவர் விஜயலட்சுமி (55). இவர் கடந்த 1996-ல் உடுமலை சட்டசபைத் தொகுதியில் சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரது கணவர் பெயர் விஜயன்.
சதுர்வேதியிடம் ஏமாந்தது எப்படி என்பது குறித்து நிருபர்களிடம் விஜயலட்சுமி கூறியதாவது:
கடந்த 1998-க்கு முன் நான் கோவை ஆர்.எஸ்.புரத்தில் குடியிருந்தபோது சரவணன் என்ற சதுர்வேதி சாமியார் ஆர்.எஸ்.புரம்பொன்னையபுரத்தில் தங்கி இருந்தார். அதன் பின்னர் கோவை ராம் நகர் சரோஜினி வீதியில் இரண்டு பங்களாக்களை வாடகைக்குஎடுத்து வசித்தார். அப்போதுதான் எனக்கு சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டது.
என்னுடைய குடும்பப் பிரச்சினை தொடர்பாக அவரிடம் பேசியபோது, அதனைத் தீர்த்து வைக்க ரூ.10 லட்சம் கேட்டார். நானும்பல தவணைகளில் ரூ.5 லட்சம் பணமும் 100 பவுன் நகைகளையும் அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் என்னுடைய பிரச்சினையை அவர் தீர்த்து வைக்கவில்லை. இந் நிலையில்தான் அவர் பெண்களைப் பாலியல் பலாத்காரம்செய்வதாகவும் போலி சாமியார் என்பதும் தெரிய வந்தது.
அந்த சமயத்திலேயே நான் கொடுத்த பணம், நகைகளை திருப்பிக் கேட்டேன். ஆனால் ஒரு சில நாட்களில் திடீரெனபங்களாவைக் காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அதன் பிறகுதான் சென்னை சென்று அவர் மீது புகார் கொடுத்தேன்என்றார் விஜயலட்சுமி.
ஆசிரமம் நடத்தி வந்த விஜய்லட்சுமியே இன்னொரு ஆசிரமம் நடத்திய சதுர்வேதியிடம் ஏமாந்ததாக பகீர் புகார் கூறியுள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications