சங்கரராமன் விவகாரம்: அதிமுக பிரமுகரை நீக்கிய ஜெ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் போலி குற்றவாளிகளை சரணடைய ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகியைகட்சியிலிருந்து நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் 5 போலி குற்றவாளிகள் சரணடைந்தனர்.இவர்களை விஜயேந்திரரின் தம்பி ரகுவின் கோரிக்கையை ஏற்று சென்னை எம்.ஜி.ஆர். நகர் இளைஞர் அணி அதிமுக செயலாளர்பழனிதான் ஏற்பாடு செய்தார் என்பது தெரிய வந்தது.
மேலும், முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான கதிரவனுடனும் பழனிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தற்போது பழனியும்இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில் பழனியை அதிமுகவிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவருடன் கட்சியினர் யாரும் தொடர்புவைத்துக் கொள்ளக் கூடாது என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications