ஜாமீன் மேல்முறையீடு வேண்டாம்: ஜெயேந்திரர் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று ஜெயேந்திரர் தனது வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயேந்திரரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில் அதை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை(நேற்று) உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கூறப்பட்டது.
இந் நிலையில் மேல் முறையீட்டுக்கு ஜெயேந்திரர் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதுதொடர்பாக தன்னை சந்தித்த வழக்கறிஞர்வி.கிருஷ்ணமூர்த்தியிடம், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய வேண்டாம் என்று ஜெயேந்திரர்கண்டிப்பாக கேட்டுக் கொண்டார்.
மேல் முறையீடு தொடர்பாக தன்னிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்றும் வழக்கறிஞரிடம் ஜெயேந்திரர் கடிந்து கொண்டதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து மேல் முறையீடு தொடர்பான முயற்சிகளை ஜெயேந்திரர் தரப்பு கைவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications