விருந்தை புறக்கணித்த பாஜக தலைவர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயேந்திரர் கைதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருப்பதால், மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்றிரவுதரவிருக்கும் விருந்தில் பாஜக தலைவர்களால் கலந்து கொள்ள இயலாது என்று அக் கட்சியின் மக்களவைத் துணைத் தலைவர்விஜய்குமார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மக்களவையின் குளிர்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்தும் வகையில், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களுக்குஇடையே நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க சாட்டர்ஜி விருந்துக்கு அழைத்தார்.

இன்றிரவு நடைபெறும் இந்த விருந்தில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி, முன்னாள்மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முன்னதாக ஒத்துக் கொண்டனர்.

ஆனால் தற்போது ஜெயேந்திரர் கைது விவகாரம் பெரிதாகியுள்ள நிலையில், அதைக் கண்டித்து கட்சித் தலைவர்கள் 24 மணி நேரஉண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். எனவே அவர்களால் விருந்தில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இன்றிரவு நடைபெறுவதாக இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அனைத்துக் கட்சிக் கூட்டம்நாளை காலை திட்டமிட்டபடி நடைபெறும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+