For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபை: திமுகவினர் வெளியேற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைக் கூட்டத்தில் கோஷமிட்டவாறு இருந்த திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்குசபாநாயகர் காளிமுத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

தமிழக சட்டசபையில் இன்று காலை அந்நிய முதலீடுகள் குறித்து பார்வர்ட் பிளாக் உறுப்பினர் சந்தானம் பேசினார். அப்போது,ஃபோர்ட், ஹூண்டாய் போன்ற கார் நிறுவனங்கள் சென்னைக்கு வந்ததற்கு திமுக ஆட்சிதான் காரணம், ஜெயலலிதா காரணமல்லஎன்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு விளக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நயினார் நாகேந்திரன் பதிலளித்தார். அவர் பேசுகையில், புரட்சித் தலைவி, இதயதெய்வம் அம்மா தலைமையில்தான் தமிழகம் தொழில் வளர்ச்சியில் புத்துணர்வு கண்டுள்ளது. இதைப் பொறுக்க முடியாமல்கருணாநிதி சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகிறார் என்றார்.

அப்போது திமுக உறுப்பினர்கள் குறுக்கிட்டு சிறுபிள்ளைத்தனமானது என்று நாகேந்திரன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துகோஷமிட்டனர். அந்த வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கோஷமிட்டனர்.

சிறுபிள்ளைத்தனமானது என்று அமைச்சர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என முதல்வர் ஜெயலலிதாவும், அவை முன்னவர்பொன்னையனும் தெரிவித்தனர். இதையடுத்துசிறுபிள்ளைத்தனமானது என்ற வார்த்தையை அவைக் குறிப்பிலிருந்து நீக்கசபாநாயகர் காளிமுத்து மறுத்து விட்டார்.

அப்போது திமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் துரைமுருகன், தொடர்ந்து பேசிய துரைமுருகன், பெரும் அரசியல் வரலாறு கொண்டஒரு தலைவரைப் பார்த்து அமைச்சர் ஒருவர் சிறுபிள்ளைத்தனம் என்று சொல்வது மகா கண்டனத்துக்குரியது. அந்த வார்த்தையைஅவைக் குறிப்பில் இருந்து நீக்கியே ஆக வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய துரைமுருகன், அமைச்சர் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக ஒரு கடுமையான வார்த்தையைஉபயோகித்தார். இதற்கு ஆளும் கட்சித் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

பதிலுக்கு திமுகவினரும் கூச்சலிட அவையில் அமளி-துமளி நிலவியது. உடனே, துரைமுருகன் சொன்ன வாரத்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதை எதிர்த்து திமுகவினர் கோஷமிட்டனர். இதனால் அவையில் 20 நிமிடங்கள் பெரும் கூச்சல்-குழப்பம் நிலவியது.இதையடுத்து அவர்களை அவையிலிருந்து வெளியேற்ற காளிமுத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவைக் காவலர்களால்திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், பாமகா தலைவர் ஜி.கே. மணி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. பழனிச்சாமி ஆகியோர் எழுந்து, சிறுபிள்னைத்தனமானது என்ற வார்த்தை தவறானது. அதைஅவைக் குறிப்பில் இருந்து நீக்குவது தான் சரி என்றனர்.

ஆனால், அவர்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் அவர்கள் தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுடன் கூண்டாகவெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X