பிறமொழி சினிமா: ராஜ்குமார் போராட்டம்
பெங்களூர்:
பிறமொழி திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 3 வாரத் தடையைக் கடுமையாக அமல்படுத்தக் கோரி வருகிற 25ம் தேதி நடிகர்ராஜ்குமார் தலைமையில் கன்னடத் திரையுலகினர் கர்நாடக சட்டசபை கட்டடத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறார்கள்.
தமிழ், இந்தி உள்ளிட்ட வேற்று மொழித் திரைப்படங்களை படம் வெளியாகி 7 வாரங்களுக்குப் பிறண்தான் கர்நாடகத்தில்திரையிட வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை உத்தவு பிறப்பித்தது.
பிறகு இந்த தடை 3 வாரமாகக் குறைக்கப்பட்டது. இந்த 3 வாரத் தடைக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் கண்டனம்தெரிவித்ததோடு, தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து வீர் ஜாரா என்ற இந்திப் படம்திரையிடப்பட்டது.
இதற்கு கர்நாடக ரக்ஷணா வேதிகே என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந் நிலையில் கன்னட திரையுலகினரின்அவரசக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், ரவிச்சந்திரன், தயாரிப்பாளர்பசந்த்குமார் பாட்டீல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பிறமொழிப் படங்களுக்கு விதிக்கப்பட்ட 3 வாரத் தடையை கடுமையாக அமல்படுத்துமாறு கோரி வருகிற 25ம்தேதி நடிகர் ராஜ்குமார் தலைமையில் கர்நாடக சட்டபைக் கட்டத்திற்கும் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது.
இதன்பிறகும் 3 வாரத் தடையை கடைப்பிடிக்க அரசு உத்தரவிடத் தவறினால், இந்த மாத இறுதியில் கன்னட திரையுலகினர்வேலைநிறுத்தம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் குறித்து ஆலோசிக்க இன்று மறுபடியும்நடத்தப்படுகிறது.
இத்தகவலை பசந்த்குமார் பாட்டீல் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications