காங்கிரஸ் எம்.பியிடம் முத்துலட்சுமி மனு
Subscribe to Oneindia Tamil
ஓசூர்:
அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு நிவாரணம் கிடைக்க உதவுமாறு கோரி காங்கிரஸ் எம்.பி. சுதர்சனநாச்சியப்பனிடம் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மனு கொடுத்தார்.
பென்னாகரம் அருகே உள்ள நெருப்பூர் கிராமத்தில், காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் பிரிவின் சார்பாக குறை கேட்புமுகாம் ஒன்றுக்கு சுதர்சன நாச்சியப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.
அதிரடிப்படையின் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவது முகாமின்நோக்கமாகும். முகாமுக்கு வந்த முத்துலட்சுமி, சுதர்சன நாச்சியப்பனிடம் மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிரடிப்படையால் நானும் எனது குடும்பத்தினரும் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாதான் கருணை காட்டி உதவ வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications