டிவி சானல் தொடங்க பாமக திட்டம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
திமுக, அதிமுக வரிசையில் பாமகவுக்கு என தனியாக தொலைக்காட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாமகசெய்திகளை பத்திரிக்கைகள் நன்றாகவே வெளியிடுகின்றன. ஆனால் பாமகவுக்கென ஒரு தொலைக்காட்சிதான் இல்லை.
இந்தக் குறையைப் போக்க வண்டும். அதற்கு பாமகவில் உள்ள 200 பேர் சேர்ந்து தலா ரூ. 1 லட்சம் கொடுத்தால் போதும்,டிவியை தொடங்கி விடலாம். போதிய நிதி கிடைத்தால் வருகிற பொங்கல் முதல் கூட டிவியை தொடங்கி விட முடியும்.
பாமகவில் தலித்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்க்க முயற்சிக்க வேண்டும். அதேபோலபெண்களையும் அதிக அளவில் உறுப்பினர்களாக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications