விஎச்பி பந்த்: தமிழகத்தில் தோல்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடு தழுவிய அளவில்விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று அறிவித்த பந்த்துக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால், பந்த் முழு வெற்றியடைந்தாக வி.எச்.பி. தலைவர் பிரவீண் தொகாடியா நிருபர்களிடம் தெரிவித்தார். சங்கராச்சாரியாரின்வழக்கை குஜராத் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சங்கரராமன் கொலை வழக்கில் கடந்த 11ம் தேதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து கடந்த 13ம் தேதிதமிழகத்தில் மட்டும் வி.எச்பி. பந்த் நடந்த அழைப்பு விடுத்தது. ஆனால், அந்த பந்த் பிசுபிசுத்தது.

இந் நிலையில் இன்று நாடு தழுவிய அளவில் பந்த் நடத்த வி.எச்.பி. அறிவித்தது. இதில் கலந்து கொள்ளப்போவதாக பாஜகவும்அறிவித்தது.

ஆனால் தமிழகத்தில் பந்த்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை. மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. கடைகள்,வணிக வளாகங்கள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. பேருந்து, கார், ஆட்டோ ரிக்ஷா போக்குவரத்தும்வழக்கம்போல் இயங்கின.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கோவையிலும் இரு இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்தது. இதைத் தவிர்த்துமாநிலத்தின் வேறு எந்த இடங்களிலும் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இருப்பினும் பந்த் அறிவிப்பையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

500 பேர் கைது:

இதற்கிடையே கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுமார் 500 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

கோயம்புத்தூர் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற வி.எச்.பி. மாநில தலைவர் மயில்சாமி,பாஜக பொருளாளர் சேகர் மற்றும் இந்து முன்னணி, பஜ்ரங்க்தள் அமைப்புகளைச் சேர்ந்த 104 பேரை போலீஸார் செய்தனர்.இவர்களில் 7 பெண்களும் அடங்குவர்.

இதே போல அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதாக திருப்பூரில் இந்து முன்னணித் தலைவர்சுப்பிரமணியன் உட்பட 218 பேரும், பொள்ளாச்சியில் 50 பேரும், அவினாசியில் 25 பேரும், மேட்டுப்பாளையத்தில் 38 பேரும்கைது செய்யப்பட்டனர்.

இந் நிலையில் கோவை ஆவாரம்பாளையம் அருகே அரசு பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கல்வீசித் தாக்கினர்.இதில் பஸ்சில் பயணம் செய்த சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கல்வீசியவர்கள், பாரத் மாதா கீ ஜே என்று கோஷம்எழுப்பினர்.

பந்துக்கு மகாராஷ்டிரம், ஆந்திரம், மத்தியப் பிரசேத்தில் ஆதரவு கிடைத்தது. அதே நேரத்தில் கர்நாடகத்தில் இந்த பந்த்தோல்வியடைந்தது.

இந் நிலையில் ராஞ்சியில் நிருபர்களிடம் பேசிய தொகாடியா, நாடு முழுவதும் பந்த் முழு வெற்றியடைந்தாகத் தெரிவித்தார்.மேலும் இந்த வழக்கை (நரேந்திர மோடி ஆளும்) குஜராத் மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+