ஜெயேந்திரர் அப்பாவி: விஜயேந்திரர் பேட்டி
சென்னை:
ஜெயேந்திரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவர் ஓர் அப்பாவி என்று காஞ்சிஇளைய மடாதிபதி விஜயேந்திரர் கூறினார்.
ஜெயேந்திரர் கைதிற்குப் பின் நிருபர்களை சந்திக்காத விஜயேந்திரர் முதன் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார். இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
-நீதிமன்றத்தால் தான் உண்மையை கண்டுபிடிக்க முடியும். ஆனால் என்னுடைய குரு ஒரு அப்பாவி என்பதையும், அவர் மீதுசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதையும் உறுதியாக நம்புகிறேன்.
ஆன்மீகத்திலும், சமூக சேவையிலும் அவரை தலை தூக்க விடக்கூடாது என்ற நோக்கத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள்கூறப்படுகின்றன.
ஜெயேந்திரரை சந்தித்துப் பேச நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளேன்.
எத்தகைய ஆச்சாரமான ஐதீகம் கலந்த ஒழுக்கத்தை கடை பிடிக்கிறோம் என்பதும், உலக நன்மைக்காக நாங்கள் நடத்தியயாகங்கள் குறித்தும் மக்களுக்குத் தெரியாது.
ஆனால் இன்று பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் உண்மைக்கு மாறாக எல்லா தகவல்களையும் திரித்து சொல்கின்றன.
என் சகோதரர் ரகுவை ஒரு கிரிமினல் குற்றவாளி போலவும், அவர் தலைமறைவாகி பதுங்கி விட்டதாகவும் செய்திபரப்பினார்கள். ஆனால் அவர் மடத்தில்தான் இருக்கிறார். எங்கும் ஓடிப்போய்விடவில்லை. சந்தேகம் இருப்பின் நேரில் வந்துபார்க்கலாம்.
சில பத்திரிக்கைகள் நினைத்ததை எல்லாம் சுதந்திரமாக எழுதுகின்றன. இப்போது என்னுடைய குருவை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருக்கிறது.
எத்தகைய சோதனைகளை அவர் தாங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் வாயிலாகவே தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.எல்லா தகவல்களும் குழப்பமாகவே இருக்கின்றன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications