தில் பாண்டியனின் திடுக் வாக்குமூலம்
காஞ்சிபுரம்
சங்கரராமன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போலி குற்றவாளி தில் பாண்டியன், காஞ்சிபுரம்குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளான்.
அவன் கூறியுள்ளதாவது:
நான் சென்னை முகப்பேரைச் சேர்ந்தவன். அப் பகுதியில் உள்ள ஆறுமுகம், சதீஷ் ஆகிய ரெளடிகளுடன் சேர்ந்து தாதா வேலைசெய்து வந்தேன். எங்கள் மீது பல அடிதடி வழக்குகள் உண்டு.
சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது நான் அடிதடி வழக்கில் சிறையில் இருந்தேன். இதனால் அந்தக் கொலைக்கும்எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
அக்டோபர் 5ம் தேதி தான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அப்போது அப்புவின் ஆள் என்னையும் என் சகாக்களையும்சந்தித்தார். எங்களை கே.கே. நகருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு வைத்து, ஒரு கொலை வழக்கில் நீங்கள் கோர்ட்டில் சரணடைய வேண்டும், எதற்கும் பயப்பட வேண்டாம். சிறையில்இருக்கும்போது உங்கள் குடும்பத்துக்குத் தேவையான நிதியுதவியை செய்வோம். ரூ. 50,000 தருகிறோம். நல்ல வழக்கீலைவைத்து 2 மாதத்தில் வெளியில் எடுத்துவிடுவோம். வழக்கை நாங்கள் நடத்திக் கொள்வோம் என்றனர்.
அட்வான்சாக ரூ. 30,000 தந்தனர். இதை வாங்கிக் கொண்டு நானும் கூட்டாளிகள் 4 பேரும், நாங்கள் தான் சங்கரராமனைக்கொன்றோம் என்று சொல்லி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் பொய்யாக சரணடைந்தோம்
இவ்வாறு கூறியுள்ளான் தில் பாண்டியன்.
நீதிமன்றத்தில் சரணடைந்த இந்த தில் பாண்டியன் உள்ளிட்ட 5 போலி குற்றவாளிகளையும் அடித்து, நொறுக்கித் தான்உண்மையான குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் போலியாகசரணடைந்த இவர்களை தங்களது கஸ்டடியில் எடுத்த போலீசார், மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் வைத்துபூஜை நடத்தினர்.
முதலில் வாயைத் திறக்க மறுத்த இந்த 5 பேரும் பின்னர் அடி, உதை பொறுக்க மாட்டாமல் அப்புவைக் கை காட்டினர்.இதையடுத்து தான் உண்மையிலேயே கொலை செய்த அப்புவின் ஆட்களை மடக்கியது போலீஸ். ஆனால், இந்தத் தகவல் அறிந்தஅப்பு தலைமறைவாகிவிட்டான். இப்போதும் தலைமறைவாகவே உள்ளான்.
இவர்கள் 5 பேரையும் அப்பு போலீயாக சரணடைய வைக்கவும் கூட போலீசார் பரப்பிய ஒரு பொய் தான் காரணம் என்பதுகுறிப்பிடத்தக்கது. சங்கரராமன் கொலை வழக்கை தீவிரமாக விசாரிக்கச் சொல்லி மேலிடத்தில் இருந்து ரொம்ப பிரஷ்ஷர் வருது,இதனால் யாராவது 4,5 பேர் போலியாக சரணடைந்தால் கூட கேஸை அப்படியே மூடிவிடுவோம் என்று காஞ்சிபுரம் பகுதிரெளடிகளுக்கும், சங்கர மடத்திற்குள்ளும் தகவலைப் பரப்பியது போலீஸ்.
இதையடுத்தே போலி குற்றவாளிகளை சரணடைய வைப்பது என்ற முடிவுக்கு சங்கராச்சாரியார் வந்தார் என்கிறது போலீஸ்.இதற்கும் அவர் நாடியது அப்பு தரப்பைத் தான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications