பாமக, பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் கெடு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கடந்த மக்களவைத் தேர்தல் கணக்கை சமர்பிக்குமாறு பாஜக, பாமக உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கெடுவிதித்துள்ளது.
தேர்தல் முடிந்ததும் இரண்டு மாதத்திற்குள் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செயய வேண்டும்.
ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலுக்கான செலவு கணக்கை பாஜக, பாமக, பார்வர்ட் பிளாக், உத்தரகண்ட் கிரந்தி தள்,நாகலாந்து மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய கோன்ஸ் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் இதுவரை சமர்பிக்கவில்லை.
பாஜக தொடர்ச்சியாக கால அவகாசம் கேட்டு வந்தது. இந் நிலையில் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இம்மாத இறுதிக்குள் செலவுக் கணக்கை தாக்கல் செய்யாத மேற்கூறப்பட்ட கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரத்தை ரத்து செய்வதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications