For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாமுடன் ராமதாஸ் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சென்னையில் அடுத்த மாதம் 8, 9, 10 தேதிகளில் நடைபெற உள்ள பொங்கு தமிழ் பண்ணிசை விழாவில்கலந்துகொள்ள வருமாறு கலாமுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.

அந்தத் தேதிகளில் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்புதல் கொடுத்துவிட்டதால் தன்னால் கலந்துகொள்ள இயலாதுஎன்று தனது வருத்தத்தை வெளியிட்ட கலாம், நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நீடித்தது. அப்போது தமிழ் வளர்ச்சி உள்பட பல விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனைநடத்தினர்.

பின்னர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கை ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.

இன்று நடைபெறும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X