மீண்டும் மத்திய அமைச்சரானார் சிபு சோரன்
டெல்லி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் இன்று மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைத்தார். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கொலை வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஜூலை 24ம் தேதி பதவி விலகினார் சிபு சோரன். அந்த வழக்கில் அவர் ஜாமீன்பெற்று வெளியே வந்துவிட்டதையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சோரனுக்கு மீண்டும் நிலக்கரித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல துறை ஏதும் ஒதுக்கப்படாமல் மத்திய அமைச்சராக இருந்து வந்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவுக்குதொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒதுக்கப்பட்வுள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றபோது கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக ராவ் பதவியேற்றார். ஆனால், அதை திமுகவலுக்கட்டாயமாக கேட்டு வாங்கிவிட்டால், துறையில்லாத அமைச்சரானார் ராவ்.
இதுவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலாவுக்கு சுரங்கத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. கண்டனம்:
கொலை வழக்கில் சிக்கிய சிபு சோரனை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்ததன் மூலம் மத்திய அரசின் நேர்மைசந்தேகத்துக்கிடமாகிவிட்டதாக பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி இவ்வாறு கருத்துதெரிவித்தார்.












Click it and Unblock the Notifications